மிச்சிகனில் உள்ள கிராண்ட் ராப்பிட்ஸில் வாழ்ந்து வந்த ஒரு பெண், அவளது கணவர் உறங்குவதற்காகப் படுக்கை அறைக்குச் சென்றபின். ஓய்வெடுக்கும் இருக்கையிலேயே உறங்கி விட்டாள். அந்த தம்பதியினர், அறையில் இருந்த நழுவும் கதவினைப் பூட்ட மறந்துவிட்டனர். அதன் வழியாக அழையா விருந்தாளியாக ஒரு மனிதர் திருட்டுத்தனமாக வீட்டிற்குள் நுழைந்து விட்டான். கணவர் உறங்கிக் கொண்டிருந்த படுக்கை அறைக்குச் சென்று அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியைத் தூக்கினான். உறங்கிக் கொண்டிருந்த அந்த மனிதன் விழித்துக் கொண்டான். அங்கு நின்று கொண்டிருந்த ஓர் உருவத்தைப் பார்த்து, “அன்பே படுக்கைக்கு வா” என்று மெதுவாகக் கூறினாள். அதைக் கேட்ட அந்தக் திருடன், பயந்து, தொலைக் காட்சிப் பெட்டியை வைத்து விட்டு பீரோவில் இருந்த பணக் கட்டை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான்.
அந்தத் திருடனுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருநதது. அவன் பணக்கட்டு என்று எடுத்தது உண்மையில், ஒரு பக்கம் 20 டாலர் படத்துடனும், மறுபக்கம் தேவன் மனிதர்களுக்கு அருளும் அன்பு, மன்னிப்பு பற்றியும் அச்சிடப்பட்டிருந்த துண்டுப்பிரதிகளாகும். அவன் எதிர்பார்த்த பணத்திற்குப் பதிலாக அவன் மேல் தேவன் காட்டும் அன்பைப் பற்றிய விவரங்களைத் அந்தத்திருடன் அறிந்தான்.
இயேசுவைப் பின்பற்றினவர்களைத் துன்பப்படுத்துவதோடு அல்லாமல் அவர்களைக் கொல்லவும், அழிக்கவும் செய்த சவுல் தமஸ்குவிற்குப் போகும் பாதையில், இயேசு அவனுக்குத் தரிசனமானதைக்குறித்து, சவுல் என்ன நினைத்திருப்பார் என்பதைக் குறித்து நான் சிந்திக்கலானேன் (அப் 9:1-9). பிற்காலத்தில் பவுல் என்று அழைக்கப்பட்ட சவுல் அவனுக்கு அளிக்கப்பட்ட தேவனுடைய கிருபையை எண்ணி ஆச்சரியப்பட்டிருப்பான். “தேவனுடைய பலத்த சத்துவத்தினால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்துக்கு ஊழியக்காரனானேன்” (எபே 3:7) என்று அவருக்கு அளிக்கப்பட்ட கிருபையை ஒரு வரம் என்று கூறுகிறார்.
உங்களுடைய வாழ்க்கையில் அன்பையும், மன்னிப்பையும் காண்பிக்கிற தேவனுடைய பரிசாகிய கிருபையை எண்ணி ஆச்சரியப்படுகிறீர்களா?