ஃபையோடர் டோஸ்டோவிஸ்கி என்ற ரஷ்ய எழுத்தாளர் “ஒரு சமுதாயத்துடைய நாகரீகத்தின் முன்னேற்றத்தின் அளவை அங்குள்ள சிறைச்சாலைகளுக்குச் சென்று பார்ப்பதின் மூலம் தீர்மானிக்கலாம்” என்று கூறினார். அந்த விளக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு, “உலகில் உள்ள சிறைகளில் மிகவும் பயங்கரமான 8 சிறைகள்” பற்றி கணிப் பொறியில் இணைக்கப்பட்டு வெளியான செய்தி ஒன்றை வாசித்தேன். இந்த 8 சிறைகளில் குறிப்பிட்ட ஒரு சிறையில் ஒவ்வொரு கைதியும் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.

நாம் ஒரு சமுதாயமாக, ஒருவரோடொருவர் உறவு கொண்டு வாழ உருவாக்கப்பட்டுள்ளோமே ஒழிய, தனிமையில் வாழ உருவாக்கப்படவில்லை. இதனால் தான் தனி அறையில் அடைக்கப்படுவது மிகவும் கடுமையான தண்டனையாக உள்ளது.

கிறிஸ்து சிலுவையில் தொங்கின பொழுது பிதாவோடு அவர் கொண்டிருந்த நித்திய உறவு துண்டிக்கப்பட்டது. அந்தத் தனிமையினால் ஏற்பட்ட வேதனையை இயேசு உணர்ந்தார், சகித்தார் என்பது “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று இயேசு மிகுந்த சத்தமிட்டுக் கூறினதின் மூலம் தெவளிவாக விளக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து நமது பாவங்களின் பாரத்தினால் பாடுபட்டு, மரித்தபொழுது, திடீரென கைவிடப்பட்டவராக தனிமையில் விடப்பட்டவராக அவரது பிதாவோடு இருந்த தொடர்பு அற்றுப் போனவராக இருந்தார். ஆயினும் அவர் தனிமையில் பட்ட பாடுகளால், “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபி 13:5) என்ற பிதாவின் வாக்குத்தத்தத்தை நமக்காக சம்பாதித்துத் தந்துள்ளார்.

சிலுவையின் வேதனையையும், கைவிடப்பட்ட நிலையையும் கிறிஸ்து நமக்காக சகித்து நாம் ஒருக்காலும் தேவனால் கைவிடப்படாமல் இருப்பதற்கு வழிவகுத்தார்.