கலிலேயாக் கடலில் அருகில் உள்ள கப்பர்நகூமிற்கு நீங்கள் சென்றால், பழங்காலத்து ஒலிவச் செக்குகள் பலவற்றை நீங்கள் பார்க்கலாம். அவைகள் எரிமலைகளிலிருந்து கிடைக்க கூடிய கரும்பாறைகளால் செய்யப்பட்டிருக்கும். அதில் ஒரு குழியுடன் கூடிய வட்டவடிவமான பெரிய அடிப்பாகமும், ஒலிவக் காய்களை அரைக்கக் கூடிய அரைக்கும் சக்கரமும் காணப்படும். அந்த குழிக்குள்ளாக ஒலிவக் காய்கள் போடப்பட்டு கடினமான கல்லினால் செய்யப்பட்டுள்ள அரவைச் சக்கரங்களால் அரைக்கப்படும். அவ்வாறு அரைக்கப்படும்பொழுது காய்களிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது.

இயேசு மரணமடைந்த நாளிற்கு முந்தினநாள், எருசலேமிற்கு அருகில் இருந்த ஒலிவமலைக்கு போனார். அங்கு கெத்சமனே என்ற தோட்டத்தில், அவருக்கு நிகழ இருக்கின்ற நிகழ்வுகளை நன்கு அறிந்தவராக பிதாவை நோக்கி வேண்டுதல் செய்தார்.

கெத்சமனே என்ற வார்த்தைக்கு “ஒலிவ எண்ணெய்ச் செக்கு” என்று அர்த்தம். நமக்காக கிறிஸ்துபட்ட பாடுகளின் ஆரம்ப மணித்துளிகளில், அவர் உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் நசுக்கப்பட்டதை அப்பெயர் தெளிவாக விளக்குகிறது. அங்கு “அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44).

“உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்க” (யோவான் 1:29) தேவ குமாரனாகிய இயேசு நமக்காகப் பாடுபட்டு மரித்து, பிதாவாகிய தேவனுக்கும் நமக்கும் இடையே இருந்த உறவை மீண்டும் புதுப்பித்தார்.

“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:4-5).
நன்றியினாலும் பக்தியினாலும் நிறைந்து நமது உள்ளங்கள் தேவனை நோக்கிக் கதறுகின்றன.