எப்படித்தான் இத்தனை பேர் என்னைக் கண்டறிந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் ஓய்வு கால நன்மைகளைப் பற்றிய விளம்பரத்தாள்கள் அனுதினமும் அதிக அளவில் எனது அஞ்சலகப் பெட்டியில் போடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதில் அவர்கள் அளிக்கும் ஓய்வு கால நன்மைகளை பெற்றுக் கொள்வது பற்றி அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் வந்து பங்கேற்குமாறு எனக்கு அழைப்பு விடப்பட்டது. ஓய்வு பெற்றவர்கள் சார்பாக செயல்படும் ஒரு நிறுவனத்தில் வந்து சேருமாறு எனக்கு அநேக ஆண்டுகளுக்கு முன்பே அழைப்பு விடப்பட்டது. அத்தோடு கூட நான் பெற்ற அந்த விளம்பரத் தாள்கள் அனைத்தும் “நீ வயது முதிர்ந்தவனாகிறாய், அதற்கு ஆயத்தப்படு” என்று எனக்கு நினைப்பூட்டுபவையாக உள்ளன.
அநேக நாட்களாக அந்த அழைப்புகளை அலட்சியப்படுத்தி விட்டேன். ஆனால் சீக்கிரமாக அதை அலட்சியப்படுத்தாமல், அக் கூட்டங்களுக்கு செல்வேன். அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளுக்கு ஏற்ப நான் செயல்பட வேண்டும்.
சில சமயங்களில் வேதாகமத்தில் உள்ள ஞானமுள்ள வசனங்கள் மூலம் மேலே கூறப்பட்டபடி அநேக முறை நினைவுப் படுத்தப்படுகிறேன். வேதாகமப் பகுதி நம்மைப்பற்றி கூறுவது அனைத்தும் உண்மை என்று அறிவோம். ஆனால் அவற்றை ஏற்றுக் கொண்டு செயல்பட நாம் ஆயத்தமாக இல்லை. “நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக” ரோமர் 14:13. அல்லது “பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்” என்று 2 கொரி 9:6ல் கூறப்பட்டுள்ளபபடியோ இருக்கலாம். அல்லது” நீங்கள் ஓரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக்கூடப்போராடி எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருங்கள்” என்று பிலி 1:27ல் கூறப்பட்டுள்ள நினைப்பூட்டுதலாக இருக்கலாம்.
தேவனுடைய வார்த்தைகளை நாம் வாசிக்கும் பொழுது மிகவும் முக்கியமான நினைப்பூட்டுதல்களைப் பெறுகிறோம். இந்த நினைப்பூட்டுதல்கள் நமக்கு எது சிறந்தது என்றும், எவை தேவனுக்கு மகிமையைக் கொண்டுவரும் என்றும் நன்கு அறிந்துள்ள நமது பிதாவின் உள்ளத்திலிருந்து வருவதால், அந்த நினைப்பூட்டுதல்களை மிகவும் முக்கியமானவைகளாகக் கருதுவோம்.