ஒரு பத்திரிக்கையாளர் நீல நிறத்தில் எழுதும் பேனாக்களை பயன்படுத்தாத ஒரு விசித்திரமான பழக்கத்தை உடையவராக இருந்தார். ஆகவே அவருடன் பணி செய்த ஒருவர், கடையிலிருந்து அவருக்காக ஏதாவது வாங்கி வர வேண்டுமா என்று கேட்ட பொழுது, சில பேனாக்களை வாங்கி வரும்படி கேட்டார். “ஆனால் நீல நிற மைப் பேனாக்கள் வேண்டாம். ஏனெனில் நீல நிறம் எனக்கு பிடிக்காது. நீல நிறம் சலிப்பூட்டும் தன்மையுள்ளது. ஆகவே நீல நிறப் பேனாக்களை தவிர்த்து 12 பால்பாயின்ட் பேனாக்கள் வாங்கி வாருங்கள்” என்று கூறினார். அடுத்த நாள் அவன் நண்பன் தான் வாங்கி வந்த பேனாக்களை அவனிடம் கொடுத்தான். அவன் வாங்கி வந்திருந்த எல்லா பேனாக்களும் நீல நிற பேனாக்களாகவே இருந்தன. அதற்கான விளக்கத்தை அந்தப் பத்திரிக்கையாளர் கேட்ட பொழுது, அவன் “நீ நீலம், நீலம் என்ற வார்த்தையையே மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டே இருந்தாய் ஆகவே அந்த வார்த்தை தான் என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது” என்றான். அந்தப் பத்திரிக்கையாளர் மறுபடியும் மறுபடியும் ஒரே வார்த்தையைக் கூறினால், அதற்கு பயன் இருக்கும் என்று எண்ணினான். ஆனால் அவன் விரும்பினபடி இல்லை, நேர் மாறாயிற்று.
இஸ்ரவேல் மக்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்த மோசே அவனுடைய மக்களோடு பேசின பொழுது சில காரியங்களை மறுபடியும் மறுபடியும் கூறினான். அவனுடைய ஜனங்கள் தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று 30 தடவைகளுக்கு மேலாக மோசே கட்டளையிட்டான். ஆனால் அதனுடைய விளைவு அவன் கேட்டுக் கொண்டதற்கு எதிர்மறையாக இருந்தது. கீழ்ப்படிதல் ஜீவனையும், வளமான வாழ்க்கையையும் கொடுக்கும் என்றும், கீழ்ப்படியாமை அழிவையும், மரணத்தையும் கொடுக்கும் என்றும் கூறினான் (உபா 30:15-18).
நாம் தேவனை நேசிக்கும் பொழுது, அவருக்கு கீழ்ப்படியாவிட்டால் ஏற்படும் விளைவுகளை எண்ணி பயந்து அவருடைய வழிகளில் நடவாமல், நாம் நேசிக்கும் ஒருவரைப் பிரியப்படுத்துவது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்பதால், நாம் அவருடைய வழிகளில் நடக்கிறோம். அது நினைவு கூர வேண்டிய சிறந்த காரியமாகும்.