மிகவும் வெற்றிகரமாக ஓடிய இசைப் படங்களில் ஒன்றான சவுண்ட் ஆப்-மியூசிக் என்ற படம் 1965ல் திரைப்படமாக வெளிவந்தது. அந்தப் படம் உலகில் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வந்த மக்கள் இருதயங்களையும், கருத்துக்களையும் கவர்ந்ததால் 5 அகடமி பரிசுகளோடு பல்வேறு பரிசுகளையும் பாராட்டுக்களையும் வென்றது. அரை நூற்றாண்டு கழிந்தும் சிறப்பான அப்படம் திரையிடப்படும் பொழுது, பார்வையாளர்கள் அப்படத்தில் வரும் அவர்களுக்கு பிடித்தமான கதா பாத்திரங்களைப் போல உடுப்புகளை உடுத்தி அப்படம் ஒடும் பொழுது, அப்பாத்திரங்களோடு சேர்ந்து பாடல்களை பாடுகிறார்கள்.
இசை என்பது நமது ஆத்துமாவில் ஆழமாக வேரூன்றி உள்ளது. இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுக்கு விசுவாசப் பயணத்தில் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திக் கொள்ளக் கூடிய வழிமுறையாக உள்ளது. “கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்தி சொல்லிக் கொண்டு உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடுங்கள் (கொலோ 3:16), என்று பவுல் கொலோசேயிலுள்ள விசுவாசிகளை ஊக்கப்படுத்தினார்.
கர்த்தருக்காக நாம் இணைந்து பாடுவது நமது உள்ளங்களிலும், ஆத்துமாக்களிலும் அவரின் அன்பின் செய்தியை ஆழமாக பதித்து வைக்கிறது. இசையானது நாம் ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ளக் கூடியதும், ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தக் கூடியதுமான வல்லமையுள்ள போதக ஊழியமாக இருக்கிறது. “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்” சங் 51:10 என்று நமது இருதயங்கள் கெஞ்சினாலும், “அவர் சதா காலங்களிலும் ராஜ்ஜிய பாரம் பண்ணுவார்” (வெளி 11:15), என்று மகிழ்ச்சியுடன் கெம்பீர சத்தமிட்டாலும், இசையின் வல்லமை தேவனுடைய மகிமையைப் போற்றி, நமது ஆவியை உயர்த்தி, நமக்கு சமாதானத்தை அளிக்கிறது.
இன்று கர்த்தரை போற்றி பாடுவோம்.