அநேக குடும்பங்கள் அவர்களுக்கே உரிய இரகசியமான சமையல் குறிப்புகளை வைத்திருப்பார்கள். அக்குறிப்புகளை பயன்படுத்தி சிறப்பான முறையில் உணவை மிகவும் ருசியாக சமைப்பார்கள். சீனாவில் ஹக்காஸ் என்ற குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்த எங்களுக்கு பாரம்பரியமான உணவாக அபாக்கஸ் மணிகள் என்ற ஓர் உணவு உண்டு அவை உருண்டையான குமிழ் மணிகளைப் போல இருப்பதால் அப்பெயர் பெற்றது. உண்மையில் நீங்கள் அதை ருசிபார்க்க முயற்சி எடுங்கள்.

ஆமாம், எங்களது பாட்டி மிகச்சிறந்த சமையல் குறிப்பு வைத்திருந்தார்கள். ஒவ்வொரு சீன புத்தாண்டின் பொழுதும் குடும்பக்கூடுகை நடக்கும். அப்பொழுது “இதை சமைப்பது எப்படி என்று கட்டாயமாக நாம் பாட்டியம்மாவிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எங்களுக்குள்ளாக கூறிக்கொள்வோம்.” ஆனால் எங்களது பாட்டியம்மாவிடம் அது பற்றி ஒரு பொழுதும் கேட்டதே கிடையாது. இப்பொழது அவர்கள் உயிரோடு இல்லை. அவர்களது சமையல் குறிப்பின் இரகசியம் அவர்களுடனே மறைந்துவிட்டது.

எங்களது பாட்டி இல்லாதது எங்களுக்கு அதிக வருத்தத்தைக் கொடுக்கிறது. அவர்களது சமையல் குறிப்பை இழந்ததும் மிகவும் வருத்தத்தைக் கொடுக்கிறது. நம்மிடம் ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்தை நாம் காத்து நடக்காவிட்டால் அது மிகவும் துக்ககரமான காரியமாகும். ஓவ்வொரு தலைமுறையினரும் அடுத்த தலைமுறையினருக்கு தேவனுடைய வல்லமையான செயல்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். “தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியை அறிவிப்பார்கள்” (சங் 145:4) என்று மோசேயின் ஆரம்பகால அறிவுரைகளான “பூர்வ நாட்களை நினை… உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான், உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள் (உபா 32:7) என்ற வார்த்தைகளை சங்கீதக்காரன் எதிரொலிக்கிறான்.
நாம் இரட்சிக்கப்பட்ட விதத்தையும், நமது வாழ்க்கையில் ஏற்பட்ட சவால்களைச் சந்திக்க, தேவன் நமக்கு உதவி செய்து வழிநடத்தின விதங்களையும், நாம் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் பொழுது, நாம் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவதோடு தேவனையும் கனப்படுத்துகிறோம். நாம் நமது குடும்ப உறவில் மகிழ்ச்சி அடையும் வகையில் தேவன் நம்மை உருவாக்கி இப்படியாக ஒருவருக்கொருவர் பயனுள்ளவர்களாக இருக்கச் செய்துள்ளார்.