என்ன நடக்கும்
உங்களுக்கும் எனக்கும் இடையே சில பொதுவான காரியங்கள் இருக்கும். குழப்பமிக்க, தெளிவற்ற உலகத்தைத் தவிர வேறு விதமான ஓர் உலகத்தையும் நாம் அறிவோம். இப்பூமி சபிக்கப்படுவதற்கு முன் தங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்று ஆதாமும், ஏவாளும் நன்கு அறிந்திருந்தனர். மரணமில்லாத, கடின உழைப்பற்ற, வேதனையற்ற ஓர் உலகமாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்பியதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். (ஆதி 3:16-19) பாவத்தினால் உலகம் வீழ்ச்சியடையுமுன் பசி, வேலையில்லாத் திண்டாட்டம், வியாதிகள் இருந்ததில்லை. தேவனுடைய சிருஷ்டிப்பின் வல்லமையையோ அல்லது மனிதனுக்கு, தேவனுக்கும் உள்ள உறவின்…
ஓர் சேவை செய்யும் தலைவர்
பாரம்பரிய ஆப்பிரிக்க சமுதாயங்களில் தலைமுறை தலைறையாக தலைவர்களுக்கான வாரிசுகளைத் தேர்ந்தெடுக்கும் தீர்மானம் மிகவும் சிக்கலானது. ஓர் அரசன் மரித்தபின் அடுத்த அரசனைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பதுடன் வலிமை மிக்கவராகவும், தைரியமிக்கவராகவும், புத்திக் கூர்மை உடையவராகவும் இருக்க வேண்டும். வேட்பாளர்கள் மக்களுக்கு சேவை செய்வார்களா அல்லது கொடுங்கோலாட்சி புரிவார்களா என்று அறிந்து கொள்ள பல கேள்விகள் அவர்களிடம் கேட்கப்படும். அரச பதவி ஏற்கக் கூடிய வாரிசுகள் மக்களை வழிநடத்துபவர்களாக மட்டுமல்லாது சேவை செய்பவர்களாகவும் இருப்பது அவசியம்.…
மறைந்திருக்கும் பொக்கிஷம்
நானும், என் கணவரும் வெவ்வேறு முறைகளில் வேதத்தை வாசிப்போம். ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக டாம் கற்றிருந்தான். ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி மெதுவாக வாசிக்கும் பழக்கமுடையவர். நான் மேலோட்டமாக, மிகவேகமாக வாசித்து விடுவேன். ஆனால் என் கணவர் என்னை விட வசனங்களை மிக ஆழமாக வாசித்து, வாசிப்பதைத் தன் மனதில் ஞாபகம் வைத்துக் கொள்வார். ஒரு வாரத்திற்கு முன்னால் வாசித்ததைக் கூட ஞாபகப்படுத்தி மேற்கோள் காட்டுவார். நான் ஓர் புத்தகத்தை அல்லது திரையில் சிலவற்றை வாசித்து முடித்த அந்த நிமிடமே வாசித்தது என் ஞாபகத்திற்கு வராமல்…
வாழ்க்கைக்கான பயிற்சி
சமீபத்தில் தன் சரீரத்தையும், மனதையும் கூடுமானவரை பயன்படுத்தின ஓர் பெண்மனியைச் சந்தித்தேன். மலை ஏற்றத்தில் ஈடுபட்டாள், மரணத்தை சந்தித்தாள். கின்னஸ் உலக சாதனையையும் கூட முறியடித்தாள். இப்பொழுது அவள் வேறுவிதமான ஒரு சவாலை ஏற்றுக்கொண்டு, அதில் ஈடுபட்டிருக்கிறாள். அதாவது மாற்றுத் திறனாளியான தன் பிள்ளையை வளர்க்கும் பொறுப்பு அவளுக்கு வந்தது. மலை ஏற்றத்தின் பொழுது அவள் பயன்படுத்திய தைரியம், நம்பிக்கையை இப்பொழுது தன் தாய்மைக்குரிய செயல்களுக்காக அர்ப்பணித்தாள்.
1 கொரிந்தியர் நிருபத்தில் பவுல் அப்போஸ்தலன் பந்தய சாலையில் ஓடும் ஓர் ஓட்ட வீரனைப் பற்றி…