நான்கு விதத்தில் பார்க்க வேண்டும்
ஜோன் ஆராதனைக் கூட்டத்தில் உட்கார்ந்திருந்த பொழுது தன் பிள்ளைகளின் சில பிரச்சனைகளைப் பற்றிய காரியங்களைக் குறித்துப் போராடிக் கொண்டிருந்தாள். சோர்வுற்றவளாய் தன் தாய்மைப் பொறுப்பிலிருந்து விலகிவிட விரும்பினாள். விட்டுச் செல்ல வேண்டுமென்று எண்ணுபவர்களுக்கு உற்சாகமும், ஊக்கத்தைக் கொடுக்க கூடிய செய்தியை, அன்று செய்தி கொடுத்தவர் பகிர்ந்து கொண்டார். அன்று காலை ஜோன் கேட்ட செய்தியில் அடங்கிய நான்கு சாராம்சங்கள் அவள் தொடர்ந்து தன் தாயின் ஸ்தானத்தில் தொடர்ந்து செல்ல உதவியது.
மேல் நோக்கி பார்த்து ஜெபி: ஆசாப் இரவு முழுவதும் ஜெபித்து, தேவன் இரக்கஞ்…
விசுவாசத்தின் குரல்
கேட்ட செய்தி மரத்துப்போகச் செய்தது. கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. பல கேள்விகள் எழுந்தன. பயம் அவளை ஆட்கொண்டு அச்சுறுத்தியது. இதுவரை வாழ்க்கை சுமுகமாகப் போய் கொண்டேயிருந்தது. ஆனால், திடீரென கஷ்டம் ஏற்பட்ட பொழுது எந்தவித அறிவிப்புமின்றி நிரந்தர மாற்றம் ஏற்பட்டது.
சோகமான காரியங்கள் பலவிதங்களில் நம்மைத் தாக்குகிறது - நாம் நேசிக்கும் ஒருவரின் இழப்பு, வியாதி – செல்வத்தை இழத்தல், அல்லது நமது வாழ்வாதாரத்தை இழத்தல் போன்றவை. இது யாருக்கும், எந்த சமயத்திலும் நேரிடலாம்.
ஆபத்து வரப்போவதை ஆபகூக்…
தனிமையும் சேவையும்
புகழ் மிக்க மனிதன் என்பவன் தன் வாழ்நாள் முழுவதும் தான் புகழ் அடைவதற்காக கடினமாக உழைத்து, பின் பிறர் தன்னை கண்டுபிடிப்பதைத் தவிர்க்க கருப்புக் கண்ணாடியை அணிந்து கொள்பவன் என்று நகைச் சுவை நடிகர் ஃப்ரெட் ஆலன் கூறியுள்ளார். புகழ் பெற்றவர்கள் மீது ரசிகர்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்வதால் தனிமையை அவர்கள் இழந்து போகிறார்கள்.
பொது இடங்களில் இயேசு போதிக்கும், குணமாக்கும் தம் ஊழியத்தைத் துவங்கிய பொழுது, பொது மக்கள் அவரையே சூழ்ந்து கொண்டு அவரின் உதவியை நாடி நின்றார்கள். எங்கு சென்றாலும் ஒரு…
கதவுகளைத் திறத்தல்
அமெரிக்க விளையாட்டுகளில் சார்லி சிஃபோர்ட் ஓர் முக்கியமான நபர். ப்ரஃபஸனல் கோல்ஃப் அசோசியேஷனில் கோல்ஃப் விளையாடும் உறுப்பினராகக் சேர்ந்த முதல் ஆப்பிரிக்க அமெரிக்கராவார். இவர் 1961ம் ஆண்டு வரை “வெள்ளையர் மாத்திரம்” என்ற விதிமுறை உள்ள உட்பிரிவில் கூறப்பட்ட விதிமுறையின்படி இன வேறுபாட்டினால் ஏற்பட்ட அநீதி அச்சுறுதல் ஆகியவற்றைக் சகித்துக் கடந்து சென்றார். அவர் 2004 ஆம் ஆண்டில் “உலக கோல்ஃப் புகழ் ஹால் அரங்கத்தில்” சேர்க்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கரும் ஆவார். விளையாட்டையே தம் தொழிலாகக் கொண்ட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், அங்கு…