ஜோன் ஆராதனைக் கூட்டத்தில் உட்கார்ந்திருந்த பொழுது தன் பிள்ளைகளின் சில பிரச்சனைகளைப் பற்றிய காரியங்களைக் குறித்துப் போராடிக் கொண்டிருந்தாள். சோர்வுற்றவளாய் தன் தாய்மைப் பொறுப்பிலிருந்து விலகிவிட விரும்பினாள். விட்டுச் செல்ல வேண்டுமென்று எண்ணுபவர்களுக்கு உற்சாகமும், ஊக்கத்தைக் கொடுக்க கூடிய செய்தியை, அன்று செய்தி கொடுத்தவர் பகிர்ந்து கொண்டார். அன்று காலை ஜோன் கேட்ட செய்தியில் அடங்கிய நான்கு சாராம்சங்கள் அவள் தொடர்ந்து தன் தாயின் ஸ்தானத்தில் தொடர்ந்து செல்ல உதவியது.
மேல் நோக்கி பார்த்து ஜெபி: ஆசாப் இரவு முழுவதும் ஜெபித்து, தேவன் இரக்கஞ் செய்ய மறந்தாரோ என்று தன் உணர்வுகளையெல்லாம் தேவனிடம் கொட்டினான் (சங்கீதம் 77: 9). நம் உணர்வுகள் அனைத்தையும் தேவனிடம் உத்தம மனதுடன் முழு இருதயத்துடன் கூறலாம். நாம் அவரிடம் என்ன கேட்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அவை எல்லாவற்றையும் கேட்கலாம். பதில் உடனே வராது, அல்லது நாம் எதிர்பார்த்த பதிலோ அல்லது நாம் விரும்பும் பதிலோ கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் நாம் அப்படி கேட்டதற்காக நம்மை குறைகூற மாட்டார்.
கடந்த காலத்தை எண்ணிப்பார்த்து, உங்களுக்கும், பிறருக்கும் கடந்த நாட்களில் தேவன் செய்த நன்மைகளை எண்ணிப்பாருங்கள். ஆசாப் தேவனிடம் தன் கஷ்டங்களை மாத்திரம் கூறாமல், தனக்கும், தன் ஜனத்திற்கும் காட்டிய தேவ வல்லமையையும், மாபெரும் காரியங்களையும் நினைவு கூர்ந்தான். “கர்த்தருடைய செயல்களை நினைவு கூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவு கூருவேன்” என்று பாடுகிறான் (வச. 11). முன்னோக்கிப்பார்: நீங்கள் கடந்து செல்லும் சூழ்நிலைகள் மத்தியில் நீங்கள் பெறப்போகிற நன்மைகளை சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? தேவன் செய்ய விரும்புவது என்ன? அவருடைய வழிகள் பரிசுத்த ஸ்தலத்தில் இருப்பதால் அவர் உங்களுக்குச் செய்வதைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? (வச. 13). மீண்டும் பாருங்கள்: இப்பொழுது விசுவாசக் கண்களுடன் உங்கள் சூழ்நிலைகளை உற்று நோக்குங்கள், அதிசயங்களைச் செய்கிற தேவன் அவரே. எனவே அவரையே சார்ந்து இருக்கலாம் என்று உங்களுக்குள் சிந்தியுங்கள் (வச. 14).
மேற்கூறப்பட்ட கருத்துகள் நம் எண்ணங்களைச் சீர்படுத்தி, நமது விசுவாசப் பாதையில் இயேசுவுடன் முன்னோக்கி ஓட உதவுதாக.