கேட்ட செய்தி மரத்துப்போகச் செய்தது. கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. பல கேள்விகள் எழுந்தன. பயம் அவளை ஆட்கொண்டு அச்சுறுத்தியது. இதுவரை வாழ்க்கை சுமுகமாகப் போய் கொண்டேயிருந்தது. ஆனால், திடீரென கஷ்டம் ஏற்பட்ட பொழுது எந்தவித அறிவிப்புமின்றி நிரந்தர மாற்றம் ஏற்பட்டது.
சோகமான காரியங்கள் பலவிதங்களில் நம்மைத் தாக்குகிறது – நாம் நேசிக்கும் ஒருவரின் இழப்பு, வியாதி – செல்வத்தை இழத்தல், அல்லது நமது வாழ்வாதாரத்தை இழத்தல் போன்றவை. இது யாருக்கும், எந்த சமயத்திலும் நேரிடலாம்.
ஆபத்து வரப்போவதை ஆபகூக் தீர்க்கதரிசி நன்கு அறிந்திருந்தாலும் அது அவர் உள்ளத்தில் பயத்தை ஏற்படுத்தியது. யூதா தேசத்தை பாபிலோன் தாக்கும் நாளை அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொழுது அவனுடைய இருதயம் படபடத்தது, உதடுகள் துடித்தது. அவன் கால்கள் நடுநடுங்கியது (ஆபகூக் 3: 16).
ஆபத்தை எதிர்கொள்ளும் பொழுது, பயம் என்பது இயற்கையாக ஏற்படும் ஓர் உணர்ச்சியே. ஆனால், அது நம்மை செயலிழக்கச் செய்துவிடக் கூடாது. நாம் கடந்து செல்லும் சோதனைகள் இன்னதென்று விளங்கிக் கொள்ளாத நிலையில் இருக்கும் பொழுது முந்திய காலத்தில் தேவன் எவ்வாறு கிரியை செய்தார் என்று சிந்தித்துப் பார்ப்பது அவசியம் (வச. 3: 15). அதைத் தான் ஆபகூக் செய்தார். அது அவன் பயத்தை நீக்கவில்லை. ஆனால், அது முன்னேறிச் செல்ல தைரியத்தைக் கொடுத்து தேவனைத் துதிக்கத் தூண்டியது (வச. 18).
ஆண்டு முழுவதும் தேவன் தம்மை உண்மையுள்ளவரென்று நிரூபித்திருக்கிறார். எப்பொழுதும் நம்மோடிருக்கிறார். ஏனென்றால் அவர் ஒரு போதும் மாறாதவர். நாம் நம் பயத்தின் மத்தியிலும் முழு நிச்சயத்துடன் விசுவாசத்தின் அறிக்கையாக “ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்” (வச. 19) என்று கூறலாம்.