அமெரிக்க விளையாட்டுகளில் சார்லி சிஃபோர்ட் ஓர் முக்கியமான நபர். ப்ரஃபஸனல் கோல்ஃப் அசோசியேஷனில் கோல்ஃப் விளையாடும் உறுப்பினராகக் சேர்ந்த முதல் ஆப்பிரிக்க அமெரிக்கராவார். இவர் 1961ம் ஆண்டு வரை “வெள்ளையர் மாத்திரம்” என்ற விதிமுறை உள்ள உட்பிரிவில் கூறப்பட்ட விதிமுறையின்படி இன வேறுபாட்டினால் ஏற்பட்ட அநீதி அச்சுறுதல் ஆகியவற்றைக் சகித்துக் கடந்து சென்றார். அவர் 2004 ஆம் ஆண்டில் “உலக கோல்ஃப் புகழ் ஹால் அரங்கத்தில்” சேர்க்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கரும் ஆவார். விளையாட்டையே தம் தொழிலாகக் கொண்ட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், அங்கு விளையாட சார்லி சிஃபோர்ட் கதவைத் திறந்தார்.
கதவுகளைத் திறப்பது என்பது சுவிசேஷப் பணியில் ஓர் மையக் கருத்தாகவும் காணப்படகிறது. ஆகையால் நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார் (மத்தேயு 28: 19, 20).
தேசத்தார் (வச. 19) என்ற வார்த்தை “எத்னோஸ்” என்னும் கிரேக்கப் பதத்திலிருந்து தோன்றியது. ‘எத்னிக்’ என்ற மூலப்பதத்திலிருந்தும் இது தோன்றியிருக்கலாம். நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள் என்றும் வேறுவிதமாகக் கூறலாம். சிலுவையில் இயேசு செய்த கிரியை, ஒவ்வொருவரும் பிதாவினிடத்திற்குக் செல்வதற்கான வழியைத் திறந்து கொடுத்துள்ளது.
ஆகையால் தேவன் நம்மீது கொண்டுள்ள கரிசனையைப் போல பிறர் மீது கரிசனை கொள்ளக்கூடிய ஓர் சிலாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். நாம் தேவனுடைய வீட்டிலும், குடும்பத்திலும் தனித் தனி நபராக சேர அழைக்கப்படுவோம் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்காத ஒருவரைக் கதவைத்திறந்து உள்ளே அழைக்கலாம்.