என் வீட்டிற்கு அருகில் பலகைகளிலும், சுவர்களிலும், கதவு நிலைகளிலும், வணிக வாகனங்களிலும், பதிவு செய்யப்பட்ட வியாபார ஸ்தலங்களிலும் கூட சமய சார்பான வசனங்கள் எழுதப்பட்டவையாக அபரிவிதமாகக் காணப்பட்டது. ஓர் சிற்றுந்தில் “தேவனுடைய கிருபையால்” என்று எழுதப்பட்டிருந்தது. ஓர் வர்த்தகப் பெயர் பலகையில் “தேவனின் தெய்வீக அனுகிரகம் பெற்ற புத்தகக்கடை” என்று எழுதப்பட்டிருந்தது. “விலகிச் செல்லுங்கள் – தேவதூதர்கள் காவல் காக்கிறார்கள்” என்று ஓர் மெர்சிடெஸ் பென்ஸ் காரில் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து என்னால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.

இப்படிப்பட்ட சமய சம்பந்தமான வார்த்தைகள் சுவரில் மாட்டப்பட்ட பலகைகளிலோ ஆபரணங்களிலோ அல்லது டி ஷர்ட்களிலோ எழுதப்பட்டிருந்தாலும், அது ஒருவர் தேவன் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நம்பத்தகுந்த அடையாளமாக இருக்காது. இவ்வாறு வெளிப் புறங்களில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் அல்ல நம் உள்ளான மனதில் நாம் பெற்றுள்ள சத்தியமே தேவனால் நாம் மாற்றம் பெற நமக்குள் ஏற்படும் வாஞ்சையை வெளிப்படுத்தும்.

உள்ளுர் ஊழியங்களின் ஆதரவில் ஒழுங்கு செய்யப்பட்ட ஓர் கூட்டத்தில் மக்கள் வேத வசனங்களை மனப்பாடம் செய்யும் வகையில் இருபுறமும் வேத வசனங்கள் எழுதப்பட்ட அட்டைகள் வழங்கப்பட்டதை நான் எண்ணிப் பார்த்தேன். இப்படிப்பட்ட பழக்கங்கள், மோசே இஸ்ரவேல் மக்களிடம் தேவனுடைய கற்பனைகளை ‘உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக” (உபா 6: 9) என்ற கட்டளையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. நாம் தேவனுடைய வார்த்தைகளைப் பொக்கிஷ வைப்பாக நம் இருதயத்தில் வைத்துக் காத்துக்கொள்ள வேண்டும் (வச. 6). நாம் அவைகளை நம் பிள்ளைகளுக்குக் கருத்தாய் போதித்து வீட்டில் உட்கார்ந்திருக்கிற போதும், வழியில் நடக்கிற போதும், நாம் படுத்துக் கொள்கிற போதும், நாம் எழுந்திருக்கிற போதும் கருத்தாய்ப் பேச வேண்டும் (வச. 7).

நம் முழு இருதயம், முழு ஆத்துமா, முழு பலத்தோடும் நாம் நம் தேவனிடம் அன்பு கூர (வச. 5) நமது விசுவாசமும், அர்ப்பணிப்பும் உண்மையுள்ளதாக காணப்படுவதாக.