எனக்கு அருமையான சிநேகிதியின் கணவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் தன் கணவனை இழந்து விட்டாள். அவளுடைய துக்கத்தில் நாங்கள் பங்கு கொண்டோம். ஒரு ஆலோசகராக அவள் அநேகரை ஆறுதல் படுத்தியிருக்கிறாள். இப்பொழுது, ஒவ்வொருநாள் இறுதியிலும் நாற்பது ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பின் வெறுமையான வீட்டிற்குச் செல்வது அவளால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகக் காணப்பட்டது.
எங்கள் சிநேகிதி தன் துக்கத்தின் மத்தியிலும் நொறுங்குண்ட நெஞ்சை உடையோருக்கு மிக நெருக்கமாக இருக்கும் ஒருவர் மீது சாய்ந்த கொண்டாள். “அவளுடைய வேதனையின் ஊடாக தேவன் கடந்து சென்றதினால் தான் பெருமையுடன் “விதவை” என்ற முத்திரையை ஏற்றுக் கொள்கிறேன் என்று எங்களிடம் கூறினாள். ஏனென்றால் அந்த முத்திரையை தேவன் எனக்குத் தந்ததை உணர்கிறேன் என்று கூறினாள்.
துக்கம் என்பது தனிநபர் அனுபவிக்கும் ஒன்றாகும். அவள் அனுபவிக்கும் துக்கம் அவளுடன் பிறர் பகிர்ந்து கொள்ளும் துக்கத்தினின்று மிகவும் மாறுபட்டது. அவள் கூறிய பதிலினால் அவள் துக்கம் குறையவும் இல்லை, அவள் வீடு வெறுமையாகவே தான் இருந்தது. ஆனால் எவ்விதமான ஆழந்த துக்கத்திலும் வல்லமையையும், அன்பையும் வெளிப்படுத்தும் தேவனை நாம் சார்ந்திருக்கலாம் என்பதை உணர்த்தியது.
நமது பரமபிதா தம் சொந்த குமாரனை விட்டுப் பிரிந்து ஆழ்ந்த வேதனையுற்றார். இயேசு சிலுவையில் தொங்கிய பொழுது “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார் (மத்தேயு 27: 46). ஆனாலும், அவர் நம் மீது வைத்திருந்த அன்பினால் நமது பாவங்களுக்காக வேதனைப்பட்டு பிதாவிடமிருந்து கைவிடப்பட்ட நிலையில் சிலுவையை சகித்தார்!.
அவர் தம் வேதனைகளை நன்கு அறிந்திருக்கிறார்! நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருக்கிறபடியால்” (சங் 24: 18) நமக்குத் தேவையான ஆறுதலை அவரிடம் பெற்றுக் கொள்ளலாம். அவர் நம் அருகாமையில் இருக்கிறார்.