இங்கிலாந்து அரசியல் நிபுணர் லான்ஸ்லாட் ஆலிப்ஃபன்ட் (1881-1961) “தேர்வுகளில் சரியாக விடையளிக்கும் அநேக மாணவர்கள் தாம் கற்ற பாடங்களைச் செய்முறையில் காட்டாததினால் தோல்வியடைகிறார்கள்” என்று “மொழி” என்ற தம் நூலில் குறிப்பிடுகிறார். இப்படிப்பட்ட அரைகுறையான அறிவு ஒன்றுக்கும் உதவாது” என்று ஆலிஃபான்ட் கூறுகிறார்.

பர்னபாஸ் பைப்பர் என்ற நூலாசிரியரும் தன் வாழ்க்கையில் அதற்கு இணையான கருத்தையே கூறுகிறார். “எனக்கு எல்லா பதில்களும் தெரியும், ஆகையால் நான் தேவனுடன் மிக நெருக்கமாக இருக்கிறேன் என்று எண்ணினேன். ஆனால், இயேசுவுடன் அதே உறவை வைத்திருக்கிறேன் என்ற எண்ணத்தினால் நான் என்னையே முட்டாளாக்கிக் கொண்டேன்” என்று கூறினார்.

ஒரு நாள் தேவாலயத்தில் இயேசு தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணிய மக்களைச் சந்தித்தார். தாங்கள் ஆபிரகாமின் சந்ததியார் என்று தங்கள் நிலையைப் பெருமையுடன் கூறிக்கொண்டு தேவ குமாரனை விசுவாசிக்க அவர்கள் மறுத்தார்கள்.

“நீங்கள் ஆபிகாமின் பிள்ளைகளாயிருந்தால், ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்கள்” என்று இயேசு கூறினார் (யோவான் 8: 39). அது என்ன? “ஆபிரகாம் கர்த்தரை விசுவாசித்தான் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது” (ஆதி 15: 6). இயேசு கூறியதைக் கேட்டவர்கள் அவரை விசுவாசிக்க மறுத்தார்கள். “ஒரே பிதா எங்களுக்குண்டு அவர் தேவன் என்றார்கள்” (யோவான் 8: 41) “தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவி கொடுக்கிறான். நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவி கொடாமலிருக்கிறீர்கள்” என்று இயேசு பதிலுரைத்தார் (வச 47).

தேவனுடைய கிருபையையும், இயேசுவின் ஆள்தத்துவத்தை நான் ஆழமாக அறியுமுன், காரியங்கள் வேறுவகையாகக் காணப்பட்டதை பைப்பர் நினைவு கூருகிறார். தேவனுடைய சத்தியம் நம்முடைய வாழ்க்கையை மறுரூபப்படுத்த நம்மை நாமே ஒப்புக் கொடுக்கும் பொழுது சரியான பதில்களை நாம் அதிகமாகப் பெற்றுக் கொள்கிறோம். உலகிற்கு இயேசுவை அறிவிப்போம்.