ஒரு நாள் என் நண்பனின் மகன் தன்னுடைய பள்ளிச் சீருடைக்கு மேல் விளையாடும் பொழுது அணியும் ஜெர்சியை அணிந்து கொள்ளத் தீர்மானித்தான். இவ்வாறு அன்று இரவில் விளையாட இருக்கும் தனக்கு பிடித்தமான அணியினருக்கு தன் ஆதரவை தெரிவிக்க விரும்பினான். வீட்டை விட்டு வெளியேறும் முன் தன் ஜெர்சிக்கு மேலாக ஏதோ ஒன்றை மாட்டி கொண்டான் அது ‘இயேசு’ என்று டாலரில் பொறிக்கப்பட்ட ஒரு கழுத்து சங்கிலி (செயின்).

இயேசுவே எல்லாவற்றிற்கும் மேலானவரும், எல்லாமானவரும் அவரே. “அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது” கொலோசேயர் 1:7. “அவர் சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்” கொலோசேயர் 1: 15. “அவரே சபையாகிய சரீரத்திற்கு தலையானவர்” (வச. 18). இதனால், எல்லாவற்றிற்க்கும் மேலான முதலிடம் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

நாம் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் இயேசுவுக்கு உன்னதமான கனத்தைக் கொடுக்கும் பொழுது, நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு அந்த சத்தியம் விளங்கும். வேளைஸ்தலத்தில் நாம் பணி புரியும் பொழுது முதலாவது தேவனுக்காக உழைக்கிறோமா அல்லது எஜமான்களைப் பிரியப்படுத்த உழைக்கிறோமா (வச. 3: 23) நாம் பிறரை நடத்தும் விதத்தில் இருந்து நாம் எவ்வாறு தேவனுடைய உன்னத நிலையை உயத்தி காண்பிக்கிறோம்? (வச. 12: 14) நாம் நமது வாழ்க்கையிலும், நமக்கு விருப்பமான காரியங்க ளில் நேரத்தை செலவிடும் பொழுதும் அவரை முதலிடத்தை வைக்கிறோமா?

நம் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் நம்மை அதிகமாய் ஊக்குவித்து உற்சாகபடுத்துபவராக தேவன் இருக்கும் பொழுது அவர் நம் உள்ளத்தில் மிக நேர்த்தியான இடத்தில் வீற்றிருப்பார்.