ரொட்டித் துண்டுகளுக்கு இடையே இறைச்சி, பாலாடைக் கட்டி போன்றவற்றை வைத்து தயாரிப்பது “சான்ட்விச்” என்று அழைக்கப்படும். உணவில் மிக சிறந்த சான்ட்விட்ச் “மீட் மௌண்டன் சான்ட்விச்.” இதில் ரொட்டி துண்டுகளுக்கு இடையே 6 விதமான மாமிச வகைகளுடன் கோழி இறைச்சி, மூன்று அடுக்கு பன்றி இறைச்சி, இரண்டு பாலாடைக் கட்டி என்று இன்னும் பல உணவு வகைகளை கொண்டது. இது உணவு விடுதிகளில் மட்டுமே கிடைக்ககூடிய ஓர் உணவு பண்டமாக தோன்றுகிறது.
ஆனால் இந்த “மீட் மௌண்டன்” ‘மாமிச மலை’ எந்த ஒரு உணவு விடுதியிலும் வெளிப்படையாக வைக்கப்பட்டுள்ள உணவு அட்டவணையில் காணப்படாது. இந்த சான்விட்ச், வெளியே போடப்பட்டுள்ள உணவு அட்டவணையில் இடம் பெறாது, சமுக ஊடகங்களுக்கு, நாம் கேட்டு பெற்றுக் கொள்ளும் ஓர் உணவாகவே விளங்கி வருகிறது. துரித உணவு விடுதிகளில் போட்டிகளை சமாளிக்கும் விதத்தில் நன்கு அறிமுகமான வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் கிடைக்கும் ஓர் ரகசிய உணவு பண்டமாகவே இது கிடைக்கிறது.
இயேசு தம் சீடர்களிடம் நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத போஜனம் எனக்கு உண்டு என்று கூறிய பொழுது, சீடர்களுக்கு அது இரகசிய உணவு அட்டவணையாகவே காணப்பட்டது (யோவான் 4: 32). இதனால் தன் சீடர்கள் குழம்பி போய் இருக்கிறார்கள் என்று உணர்ந்த இயேசு, “என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து, அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாய் இருக்கிறது” என்று விளக்கினார் (வச. 34).
யாக்கோபின் கிணற்றண்டையிலே இயேசு சமாரிய பெண்ணிடம், இதுவரை அவள் கேள்விப்பட்டிராத ஜீவ தண்ணீரைப் பற்றி அப்பொழுது தான் பேசி இருந்தார். அவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருந்த பொழுது வாழ்க்கையில் அவர் தீராத தாகத்தை பற்றிய இயற்கைக்கு அப்பாற்பட்ட ஓர் விளக்கத்தை அவளுக்கு வெளிப்படுத்தினார். தான் யார் என்பதை இயேசு அவளுக்கு வெளிப்படுத்திய பொழுது, அவள் தன்னுடைய தண்ணீர் குடத்தை வைத்து விட்டு ஊருக்குள் ஓடி, “அவர் மேசியாவாக இருக்குமோ?” என்று கேட்டாள் (வச. 29).
இவ்வாறு ஓர் காலத்தில் இரகசியமாக காணப்பட்டது இப்பொழுது அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது. நமது உள்ளத்தின் ஆழத்தில் எழும் வாஞ்சைகளை திருப்திப் படுத்த, அவருடைய வல்லமையை சார்ந்திருக்க நம்மை இயேசு அழைக்கிறார். அவ்வாறு நாம் அவரிடம் செல்லும் பொழுது நமது சரீரப்பிரகாரமான தேவைகளை மாத்திரம் அல்லாது நம் ஆத்துமாவையும் திருப்திபடுத்தும் நம் தேவனுடைய ஆவியையும் பெற்று வாழ முடியும் என்பதை அறிந்து கொள்வோம்.