நான் செய்த செயல்களைத் திரும்ப பெற முடியாது. என்னுடைய காருக்கு பெட்ரோல் நிரப்ப செல்லும் வழியில் ஒர் பெண் தன் காரை வழிமறித்து நிறுத்தி இருந்தாள். மறு சுழற்சி செய்வதற்கான சில பொருட்களை போட இறங்கி சென்றுவிட்டாள். நான் காத்திருக்ககூடிய நிலையில் இல்லை. எனவே என் கார் ஒலிப்பானை மிகவும் சத்தமாக அழுத்தி ஒலி எழுப்பினேன். பின் என் காரை பின்னால் எடுத்து, வேறு பாதையில் சுற்றி சென்றேன். அவள் காரை எடுக்கும் வரைக்கும் பொறுமையாய் இருக்க, அதாவது கூடினால் முப்பது வினாடிகள் கூட, காத்திருக்கக் கூடாமல் நான் இருந்ததை எண்ணி உடனே மனவேதனை உற்றேன். தேவனிடம் மன்னிப்பு கேட்டேன். ஆம் அவள் தன் காரை குறிப்பிட்ட இடத்தில் தான் நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் நானும் இவ்வாறு முரட்டுத்தனமாக நடந்திராமல் சற்று அன்பையும், பொறுமையும் காட்டி இருக்க வேண்டும் – அவள் போய்விட்டாள். துரதிர்ஷ்டவசமாக காலம் தாழ்த்தியதால் அவளிடம் மன்னிப்பு கேட்க முடியாமல் போய்விட்டது.
நமது திட்டங்களுக்கு இடையூறாக மக்கள் குறுக்கிடும் போது நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று நீதிமொழிகள் நமக்கு போதிக்கிறது. மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும் (நீதிமொழிகள் 12: 16). “வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை, மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக் கொள்வான்” (நீதிமொழிகள் 20: 3) என்று கூறுகிறது. மூடன் தன் உள்ளத்தில் உள்ளதை எல்லாம் வெளிப்டுத்துகிறான். ஞானியோ அதை பின்னுக்கு அடக்கிவைக்கிறான். நீதிமொழிகள் 29: 11) என்ற வசனம் நம் உள்ளத்தை நேரடியாக தாக்குவது போல் இருக்கிறது.
பொறுமையிலும், அன்பிலும் வளர்வது சில சமயங்களில் மிகவும் கடினமாக இருக்கும். பவுல் அப்போஸ்தலன் அது தேவனுடைய கிரியை என்றும், “ஆவியின் கனி” என்றும் கூறுகிறார் (கலாத்தியர் 5: 22-23). அவருடன் இணைந்து, அவரில் நாம் சார்ந்திருக்கும் பொழுது அந்த கனிகளை நமக்கு கொடுக்கிறார். தயவு கூர்ந்து எங்களை மாற்றும் கர்த்தாவே.