“கிளிவ்லான்ட் பிரவுண்ஸின்” நீண்டகால ரசிகனாக நான் ஏமாற்றங்களை சந்தித்திருக்கிறேன். “சூப்பர் பவுல் சாம்பியன்ஷிப் விளையாட்டில் நான்கு அணிகளில், இதுவும் ஒன்றாக ஒருபோதும் கலந்துகொள்ளாத நிலையிலும் கூட தொடர்ச்சியாக பிரவுன்ஸ்க்கு உத்தமமான ரசிகர் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. இவ்வாறு பொதுவாக ரசிகர்கள் ஏமாற்றத்தையே சந்தித்து கொண்டு வந்ததால் அநேக ரசிகர்கள் தங்கள் உள்ளுர் விளையாட்டு அரங்கத்தை “துக்கத்தின் உற்பத்தி சாலை” எனக் குறிப்பிட்டனர்.
நாம் வாழும் இந்த சிதைவு பட்ட உலகத்தையும் “துக்கத்தின் உற்பத்தி சாலை” என அழைக்கலாம். நமது தவறான தெரிந்தெடுப்பினாலோ, அல்லது நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு நிகழும் காரியங்களினாலோ அவை தலைவலியையும் ஏமாற்றங்களையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
ஆனால் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களுக்கு மறுமையில் மாத்திரம் அல்ல இம்மையிலும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. “என்னிடத்தில் உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்கு சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்.” (யோவான் 16: 33) என்று இயேசு சொன்னார். பாருங்கள்! கஷ்டங்களையும், கவலைகளையும் குறைத்துக் கொள்ளாமல் கிறிஸ்து தம்முடைய வாக்குத்தத்தங்களாகிய சமாதானம், சந்தோஷம் இறுதியாக வெற்றியையும் நாம் அனுபவிக்க நம்மை வழி நடத்துகிறார்.
கிறிஸ்துவில் மாபெரும் சமாதானம் உண்டு. நம் வாழ்க்கையில் எப்பேர்பட்ட துன்பங்கள் வந்து நம்மை தாக்கினாலும், நம் வாழ்க்கை பயணம் வெற்றியாக முடிய அந்த சமாதானமே போதுமானது.