பாரம்பரிய ஆப்பிரிக்க சமுதாயங்களில் தலைமுறை தலைறையாக தலைவர்களுக்கான வாரிசுகளைத் தேர்ந்தெடுக்கும் தீர்மானம் மிகவும் சிக்கலானது. ஓர் அரசன் மரித்தபின் அடுத்த அரசனைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பதுடன் வலிமை மிக்கவராகவும், தைரியமிக்கவராகவும், புத்திக் கூர்மை உடையவராகவும் இருக்க வேண்டும். வேட்பாளர்கள் மக்களுக்கு சேவை செய்வார்களா அல்லது கொடுங்கோலாட்சி புரிவார்களா என்று அறிந்து கொள்ள பல கேள்விகள் அவர்களிடம் கேட்கப்படும். அரச பதவி ஏற்கக் கூடிய வாரிசுகள் மக்களை வழிநடத்துபவர்களாக மட்டுமல்லாது சேவை செய்பவர்களாகவும் இருப்பது அவசியம்.

சாலமோன் தன்னில் தானே தவறான தேர்ந்தெடுப்பை செய்திருந்தாலும் தனக்கு அடுத்து வரும் வாரிசைப் பற்றி கவலைப்பட்டார். அவன் புத்திமானயிருப்பானோ, மூடனாயிருப்பானோ, அதை யார் அறிவார்? நான் பிரயாசப்பட்டு ஞானமாய்ச் சம்பாதித்த சகல வஸ்துக்களின் பேரிலும் அவன் அதிகாரியாவான் (பிரசங்கி 2:19). அவனுடைய மகன் ரெகோபெயாம்தான் அடுத்த வாரிசு. அவன் சிறந்த முறையில் தீர்ப்பு வழங்கும் தன்மையின்றி செயல்பட்டதால் அவன் தகப்பன் மிகவும் பயந்தபடியே காரியம் நடந்தது.

மக்கள் மனிதாபிமான மிக்க ஆட்சிமுறையை செயல்படுத்தக் கேட்ட பொழுது, ரெகோபெயாமுக்ககு சேவை புரியும் தலைமைத்துவத்தைக் காட்ட ஓர் சிறந்த திறமை கொடுக்கப்பட்டது. “நீர் இன்று இந்த ஜனங்களுக்கு சேவகனாகி, அவர்களுக்கு இணங்கி அவர்கள் சொற்படி செய்தால்… எந்நாளும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராய் இருப்பார்கள்” என்று முதியோர் அவனுக்கு ஆலோசனை கூறினார்கள் (1இராஜக்கள் 12:7). ஆனால், அவர்கள் ஆலோசனையத் தள்ளிவிட்டான். தேவனைத் தேட மறந்தான். அவன் ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்ததினால் இராஜ்ஜியம் பிளவுபட்டது. தேவ ஜனங்கள் தேவனுக்குரிய காரியங்களில் வீழ்ச்சியடைய இது ஊக்குவித்தது (12: 14-19).

வீட்டில், பணிபுரியும் இடத்தில், ஆலயத்தில் அல்லது அயலாகத்தாரிடமிருந்து வேலை கொள்வதை விட தாழ்மையுடன் அவர்களுக்கு சேவை செய்ய நமக்கு பரம ஞானம் தேவை.