சமீபத்தில் தன் சரீரத்தையும், மனதையும் கூடுமானவரை பயன்படுத்தின ஓர் பெண்மனியைச் சந்தித்தேன். மலை ஏற்றத்தில் ஈடுபட்டாள், மரணத்தை சந்தித்தாள். கின்னஸ் உலக சாதனையையும் கூட முறியடித்தாள். இப்பொழுது அவள் வேறுவிதமான ஒரு சவாலை ஏற்றுக்கொண்டு, அதில் ஈடுபட்டிருக்கிறாள். அதாவது மாற்றுத் திறனாளியான தன் பிள்ளையை வளர்க்கும் பொறுப்பு அவளுக்கு வந்தது. மலை ஏற்றத்தின் பொழுது அவள் பயன்படுத்திய தைரியம், நம்பிக்கையை இப்பொழுது தன் தாய்மைக்குரிய செயல்களுக்காக அர்ப்பணித்தாள்.
1 கொரிந்தியர் நிருபத்தில் பவுல் அப்போஸ்தலன் பந்தய சாலையில் ஓடும் ஓர் ஓட்ட வீரனைப் பற்றி கூறுகிறார். கொரிந்து சபை மக்களை தம் இனிய வார்த்தைகளால் உற்சாகப்படுத்தியபின் ஒருவருக்கொருவர், பிறருக்கானவைகளையும் அனுபவித்து செல்ல வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார் (அதிகாரம் 8). மராத்தான் பந்தயத்தில் ஒடுபவர்கள் இச்சையடக்கத்துடனும், சகிப்புத் தன்மையுடனும் சவால்களை ஏற்று அன்புடன் செயல்படுவதை விவரிக்கிறார் (அதிகாரம் 9). இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிபவர்களாக அவரைப பின்பற்றுபவர்கள் அநேகக் காரியங்களில் தங்களை ஒதுக்கி, விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.
விளையாட்டு வீரர்கள் கீரிடத்தைப் பெற வேண்டும் என்ற குறிக்கோளோடு தங்கள் சரீரத்தை ஒடுக்கி, கீழ்ப்படுத்தி பயிற்சிக்கிறார்கள். நாமும் நம் ஆத்துமா சுகித்து வாழ்ந்திருக்க நம் சரீரத்தையும், மனதையும் ஒடுக்கி கீழ்ப்படுத்தி பயிற்சிக்க வேண்டும். நம்மை மறுரூபப்படுத்த பரிசுத்த ஆவியானவரிடம் வேண்டிக் கொள்ளும் பொழுது, நிமிடத்திற்கு நிமிடம் நம் பழைய சுய சித்தத்தை பின்னால் தள்ளுகிறோம். தேவனுடைய பெலத்தைப் பெற்றவர்களாய் கடுமையான வார்த்தைகளைப் பேசுவதை நிறுத்தி விடுவோம். எலெக்ட்ரானிக் கருவிகளை புறம்பே தள்ளிவைத்துவிட்டு தன் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுகிறார்கள். கருத்து வேறுபாடுகள் ஏற்படும் பொழுது நம் தீர்ப்புதான் இறுதியானது என்று கூறக்கூடாது.
கிறிஸ்துவின் ஆவிக்குள்ளாக ஓட நாம் பயிற்றுவிக்கப்பட்டு ஒடும் பொழுது, தேவன் எவ்வாறு இன்று நம்மை வனைய விரும்புகிறார்?