Archives: ஜனவரி 2016

இனி ஒருபோதும் கைதி அல்ல

ஒரு வேலை ஸ்தலத்தில் நான் நடத்திய பயிற்சி வகுப்பு முடிந்தபின் ஒரு நடுத்தர வயது நபர் என்னிடம் வந்து, “கிட்டத்தட்ட என் வாழ்நாள் முழுவதும் நான் கிறிஸ்தவனாக இருந்துள்ளேன், ஆனால் என்னைக்குறித்து எப்பொழுதும் எனக்கு ஏமாற்றமே உண்டு. அப்படி செய்திருக்ககூடாது என்று நினைக்கும் காரியங்களையே நான் திரும்பத் திரும்ப செய்கிறேன், மேலும் நான் செய்ய வேண்டிய காரியங்களை அறிந்திருந்தும் செய்யாதிருக்கிறேன். தேவன் என்னைக்குறித்து சோர்ந்து போய்விடவில்லையா?” என்று கேட்டார். என் அருகில் இருந்த இரண்டு நபர்களும் கூட நான் சொல்லப்போகும் பதிலை கேட்க ஆவலாய்…

நல்வரவு

எங்கள் மகன் ஊதாரித்தனமாய் இருந்த காலக்கட்டத்தில், சபையில் ஆராதனை முடிந்து வெளியே வந்த சமயம், என்னுடைய நண்பர் ஒருவர் என்னைத் தனியே அழைத்து, “நான் உனக்காகவும் உன் மகனுக்காகவும் தினந்தோறும் ஜெபிக்கிறேன். ஆனால் எனக்கு குற்ற உணர்வு உள்ளது” என்றார்.
நான் ஏன்? என்றதற்கு.

“ஏனென்றால் ஊதாரித்தனமான பிள்ளைகளை சமாளிக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. என் பிள்ளைகள் ஒரளவு ஒழுங்கு முறைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்து கொண்டார்கள். ஆனால் அது நான் ஏதோ செய்ததாலோ செய்யாததாலோ அல்ல. ஏனென்றால் பிள்ளைகள் தாங்களாகவே தீர்மானிக்கிறார்கள்” என்றார்.…

மெய்யான மனிதர்கள், மெய்யான தேவன்

பல வருடங்களுக்கு முன்பு குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு துயர சம்பவத்தை பற்றி எழுதியிருந்தேன். அதைக் குறித்து “அனுதின மன்னா” வாசகர் ஒருவர் எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘அந்த துயர சம்பவத்தை நீங்கள் கூறின போது தான், இதன் ஆசிரியர்கள் அனைவரும் நிஜ பிரச்சனைகளையுடைய நிஜ மனிதர்கள் என்பது உணர்ந்தேன்’, என எழுதியிருந்தார். இது எவ்வளவு உண்மையான கூற்று! இந்த கட்டுரைகளை எழுதும் ஆண், பெண் அனைவரையும் கண்டால், புற்றுநோய், அடங்காப் பிள்ளைகள், நிறைவேறாத கனவுகள் மற்றும் பல வகையான இழப்புகளைக் காணலாம். நம்முடைய…

முதலாவது நீங்கள்

1963 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாளன்று திபெத்தில் (Tibet) பிறந்த ஷெர்பா நவாங் கோம்பு (Sherpa Mawang Gompu) மற்றும் ஜிம் விட்டேக்கர் (Jim Whitaker) என்ற அமெரிக்கர், எவரெஸ்ட் மலையின் உச்சியை சென்றடைந்தனர். உச்சியை நோக்கிச் செல்கையில், முதலாவதாக அங்கு செல்லும் நபருக்கு கிட்டும் கனத்தைக் குறித்து இருவரும் சிந்தித்தனர். விட்டேக்கர், கோம்பு முன்னேறி செல்லுமாறு கையசைத்தார், ஆனால் கோம்புவோ புன்முறுவலோடு, “பெரிய ஜிம், முதலாவது நீங்கள்!” என கூறினார். இறுதியில் இருவரும் ஒன்றாக, ஒரே சமயத்தில் உச்சிக்கு செல்ல…

ஓப்புரவாக்குதலின் ஊழியம்

1957ஆம் ஆண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனையில் டாக்டர் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் பிரசங்கிக்கும் பொழுது, இனவாதத்தில் மூழ்கியிருந்த சமூகத்திற்கு பதிலடி கொடுக்கும்படி தனக்குள் எழும்பிய சோதனைக்கெதிராய் போராடினதை பிரசங்கித்தார்.

அப்பொழுது அலபாமா மாகாணத்தில் மாண்ட்கோமெரி (Montogomery) என்னும் இடத்தில், டெக்ஸ்டர் சாலை பாப்டிஸ்ட் சபையில் கூடியிருந்தோரைப் பார்த்து “உங்களுடைய சத்துருக்களை எப்படி நேசிக்கிறீர்கள்?” என்று கேட்டு “அதைப் உங்களிலிருந்து தொடங்குங்கள்… எப்படியெனில் உங்கள் எதிரியை தோற்கடிக்கும் சந்தர்ப்பம் வாய்க்கும் போது, அப்படி செய்யாதிருங்கள்” என்ற பதிலை கூறினார்.

மேலும் அவர் இயேசுவின்…