2009 ஆம் ஆண்டில் குளிர் காலத்தில், நியூ யோர்க் (New York) நகரின் ஹட்சன் ஆற்றில் (Hudson River) அவசர நிலையில் பயணிகள் விமானம் ஒன்று இறக்கப்பட்டது. எந்த ஒரு உயிர் சேதமுமின்றி பாதுகாப்பாக இறக்கப்பட்ட அந்த விமானத்தின் தலைமை விமானி, செஸ்லி சலன்பெர்கரிடம் (Chesley Sullenberger), வாழ்வா சாவா எனத் தீர்மானிக்கும் தருணங்களை எதிர்கொண்டதை குறித்து கேட்டார்கள். அதற்கு அவர், “ஒருவகையில் பார்த்தால், 42 வருடங்களாக, அனுபவம், கல்வி, பயிற்சி என்னும் வங்கியில் சிறு சிறு வைப்புகளாக சீராக சேமித்து வந்துள்ளேன், அக்கணக்கிலிருந்து பெரிய அளவில் எடுத்துக்கொள்ள வங்கியில் போதுமான தொகை இருந்தது என்று கூறினார்.

பலர் ஏதாவது ஒரு சமயத்தில் ஒரு நெருக்கடியைச் சந்திக்கக்கூடும். ஒருவேளை அது பதவி நீக்கமாக இருக்கலாம் அல்லது ஒரு மருத்துவ சோதனையின் முடிவாக இருக்கலாம் அல்லது குடும்பத்தினர் அல்லது நண்பரின் மரணமாய் இருக்கலாம். அவ்வேளைகளிலே நாம் நம் ஆவிக்குரிய வங்கிக் கணக்கில் சேர்ந்து வைக்கப்பட்டுள்ள வைப்பின் ஆழத்திலிருந்து தோண்டி எடுக்க வேண்டும்.

சொல்லப்போனால், என்னத்தை நாம் அங்கு கண்டடைவோம்? ஒரு வேளை தேவனோடு ஒரு ஆழமான உறவில் மகிழ்ந்திருந்தால், விசுவாசம் என்னும் “வைப்புகளை” சீராக செலுத்தியிருப்போம். அவருடைய கிருபையை நாம் அனுபவித்திருக்கிறோம் (2 கொரி 8: 9; எபே 2: 4-7). தேவன் நீதியும், உண்மையும் உள்ளவர் என்ற வேதத்தின் வாக்குத்தத்தை நாங்கள் நம்புவோம். (உபா 32:4, 2 தெச 3: 3).

தேவ பிள்ளைகளுக்குத் தேவை எழும்பொழுது, கணக்கிலிருந்து எடுக்க தேவையான தேவ கிருபையும் அன்பும் வங்கியில் இருக்கிறது. (சங் 9: 10, எபி 4: 16).