2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எங்கள் ஊரிலுள்ள பழங்குடியினர் மத்தியிலே ஏற்பட்ட மோதலினால், என் தகப்பனாருடைய குடும்பம் அகதிகளுடன் அகதியாய், தலைநகரில் தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. பாதுகாப்பற்ற தங்கள் சொந்த ஊர்களை விட்டு பாதுகாப்பைத் தேடி பிற இடங்களுக்கு மக்கள் சென்றதை வரலாற்றிலே நாம் காணலாம்.

என் ஜனத்தை சந்தித்து விசாரித்து கொண்டிருக்கையில், யோசுவா 20: 1-9ல் குறிப்பிட்டுள்ள அடைக்கலப் பட்டணங்களைத் குறித்து சிந்தித்தேன். திட்டமிடாமல் தவறுதலாய் ஏற்பட்ட மரணத்தினிமித்தம் பழிவாங்க எத்தனிக்கும் உறவினர்களிடம் இருந்து தப்பித்து தஞ்சம்புகும்படியாய் இப்பட்டணங்கள் நியமிக்கப்பட்டிருந்தன (வச. 3). சமாதானத்தையும், பாதுகாப்பையும் இப்பட்டணங்கள் அளித்தன.

பலதரப்பட்ட காரணங்களுக்காக இன்று மக்கள் அடைக்கலப்பட்டணங்களைத் தேடுகிறார்கள். அகதிகளுக்கும், தப்பியோடியவர்களுக்கும், இருக்க இருப்பிடத்தையும், உணவையும், இப்புகலிடங்கள் அளித்தாலும், அவர்களுடைய தேவைகளை முழுமையாச் சந்திக்க முடியாது. தேவனிடம் மாத்திரமே நாம் இளைப்பாறுதலை கண்டடைய முடியும். தேவனோடு நடப்பவர்கள் மட்டுமே தேவனுக்குள் உண்மையான புகலிடத்தையும் பாதுகாப்பையும் கண்டடைவார்கள். புறஜாதிகளுக்குள் துரத்திவிடப்பட்ட நாட்களிலும், “நான் அவர்கள் போன தேசங்களில் அவர்களுக்குக் கொஞ்ச காலத்துக்குப் பரிசுத்த ஸ்தலமாக இருப்பேன்” என்று கர்த்தர் கூறுவதை எசேக்கியேல் 11:16ல் காணலாம். ஆகையால், சங்கீதக்காரனோடு சேர்ந்து நாமும், நம்பிக்கையோடு தேவனைப் பார்த்து, “நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர், என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக் காத்து இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர்” (32:7) என்று கூறுவோமாக.