பொதுவாக மக்கள், பூமியின் மையப்பாகத்திலிருந்து கற்களைத் தோண்டி எண்ணெயோ, தண்ணீரோ இருக்கிறதா என்று கண்டறிய பூமியை ஆழமாய் துளையிடுவார்கள்.
ஆவிக்குரிய வனாந்திரத்திலும், வனாந்திர வறட்சியிலும் வாழும் தன்னுடைய ஜனம் “இரட்சிப்பின் நீருற்றுகளைக்” கண்டடைய வேண்டும் என தேவன் விரும்பினார் என்பதை ஏசாயா 12ல், நீருற்றிலிருந்து பொங்கும் இளைப்பாறுதல் அளிக்கும் குளிர்ந்த நீரோடு ஒப்பிட்டுள்ளார். அநேக ஆண்டுகளாய்த் தேவனைவிட்டு விலகிச் சென்றதால், அந்நியர்களால் கைப்பற்றபட்டு, எங்கும் சிதறடிக்கபடும்படியாய், யூதா தேசத்தை தேவன் ஒப்புக்கொடுத்தார். ஆனாலும் தேவன் அவர்களோடு இருக்கிறார் என்பதற்கு அடையாளமாய், ஒரு சிறு கூட்டம் இறுதியில் தாயகம் திரும்பும் என்று ஏசாயா தீர்க்கதரிசி முன்னுரைத்தார் (ஏசாயா 11:11-12).
தமது வாக்குதத்தங்களை நிறைவேற்ற தேவன் உண்மையுள்ளவர் என்றும் குறிப்பாக இரட்சிப்பை அளிப்பதில் தேவன் உண்மையுள்ளவர் என்றும் துதிப்பாடலாக ஏசாயா 12ம்அதிகாரம் விவரிக்கிறது. மேலும், “இரட்சிப்பின் ஊற்றுகளிருந்து” கிருபையை, பெலத்தை, சந்தோஷத்தை மொண்டு கொள்ளும்படியாய் ஏசாயா ஜனங்களை உற்சாகப்படுத்துகிறார் (வச13). தேவனை நன்றியுள்ள இருதயத்தோடு துதிக்கும்படியாய் இது அவர்களை இளைப்பாற்ற பெலப்படுத்தும் (வச. 4-6).
நித்திய இரட்சிப்பின் ஊற்றிலிருந்து இளைப்பாறுதலையும் சந்தோஷத்தையும் கண்டுபிடிக்க பாவத்தை அறிக்கை செய்து மனம்திரும்படி தேவன் நம் ஒவ்வொருவர் மேலும் வாஞ்சையாய் இருக்கிறார்.