நான் சிறுவனாய் இருந்த பொழுது, பாதுகாப்பற்றது அல்லது ஞானமற்றது என்று என் பெற்றோரால் கருதப்பட்ட காரியங்களுக்காக, நான் எவ்வளவுதான் கெஞ்சினாலும், திறமையாக வாதாடுவதாகக் கருதி “எல்லோரும் இதை செய்கிறார்கள்” என்று சொன்னாலும், அதற்கு அவர்கள் சம்மதித்ததேயில்லை.

நாம் வளர வளர, நம்முடைய விருப்பத்தின்படி நடப்பதற்காக, நமது வாதங்களில், சாக்கு போக்குகளையும், சாமர்த்தியமான காரணகாரியங்களையும் பிணைத்து, “யாரும் பாதிக்கப்படமாட்டார்கள்.” “இது சட்டவிரோதமானதல்ல”, “முதலில் பாதிக்கப்பட்ட இதை அவன்தான் எனக்கு செய்தான்”, அல்லது “அவளுக்கு இது தெரிய வராது” என்று கூறுவோம். இதில், நம்முடைய தேவையே மற்றெல்லாவற்றையும் விட அதிமுக்கிமானது என்பதே நம்முடைய ஒவ்வொரு வாதத்தின் பின்னால் உள்ள நம் நம்பிக்கை.

இறுதியில் தேவன் மேல் உள்ள நம்முடைய நம்பிக்கைகளும், இந்த தவறான எண்ண அடிப்படையிலேயே அமைகிறது. சில சமயங்களில் தேவனல்ல, நாமே இந்த அண்ட சராசத்தின் மையம் என்று கூட நினைக்கும் அளவுக்கு பொய்யை நாமாகவே நம்பிவிடுகிறோம். நமது விருப்பத்தின்படி இந்த உலகத்தை நமக்கேற்றபடி மாற்றி அமைத்தால் தான், நாம் கவலையற்று மகிழ்ச்சியாக இருக்கலாம் என நினைக்கிறோம். நாம் நினைத்ததை அடைய சுலபமான வேகமான வழியை இந்த பொய் அளிப்பதால், இது திருப்திகரமானதாய் இருக்கிறது. “தேவன் அன்பாகவே இருக்கிறார். ஆகவே நான் மகிழ்ச்சியாய் இருக்கும்படி நான் எதை வேண்டுமானாலும் செய்ய அவர் சித்தமுள்ளவராய் இருக்கிறார்.” என்ற வாதத்தை இது முன்வைக்கிறது. ஆனால், இப்படிபட்ட சிந்தனை சந்தோஷத்தை அல்ல மனஉளைச்சலையே உண்டாக்குகிறது.

சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று தம்மை விசுவாசிக்கிறவர்களைப் பார்த்து இயேசு சொன்னார் (யோவான் 8: 31-32). இது மட்டுமின்றி, “பாவஞ் செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்” என்றும் எச்சரித்தார் (வச 34).

முழுமையான மனநிறைவான வாழ்விற்கு இயேசுவே வழி என்ற சத்தியத்தை நாம் ஏற்றுக் கொள்ளும்போது நாம் பெற்ற விடுதலையினால் சிறந்த மகிழ்ச்சியடைவோம்.