என்னுடைய அபிமான கொரிய சினிமா நட்சத்திரத்தின் ட்விட்டர் பக்கத்திற்கு வந்த பொழுது பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு குறிப்பு எழுத முடிவு செய்தேன் என்னால் இயன்ற அளவு ஒரு சிறப்பான செய்தியை பதிவு செய்து பதிலுக்காக காத்திருந்தேன். நான் ஒரு பதிலைப் பெறுவேன் என்பது சாத்தியமற்றது என்று எனக்குத் தெரியும். ஏனெனில், அவரைப் போன்ற பிரபலமான ஒரு நடிகைக்கு ஒரு நாளில் அநேக ரசிகர்களிடமிருந்து செய்தி வரும் என்று தெரியும். இருப்பினும், எனக்குப் பதில் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது.
நல்லவேளை, தேவன் நமக்கு பதிலளிப்பவராக இருக்கிறார். அவர் “உன்னதமானவர், சர்வவல்லவர்” அவருடைய சிங்காசனம் உயர்ந்திருக்கிறது, அவருடைய வல்லமை முடிவற்றது. ஆனாலும், அவர் எப்பொழுதும் நமக்கு சமீபமாகவே இருக்கிறார். “அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச்செய்வேன்” (சங் 91: 15)
ஒரு ராஜாவைக் குறித்து புராண கதை ஒன்று இப்படியாகக் கூறுகிறது. ஒரு அரசன் திரைச்சீலைகளும், தனக்கு ஆடைகளும் செய்யும்படி சில நெசவாளர்களை வேலைக்கு அமர்த்தினான். பட்டு நூலையும், வரை படங்களையும் கொடுத்து, ஏதாவது சந்தேகமெனில் அவரை உடனடியாக அணுகும்படி கட்டளையிட்டான். ஒரு இளம் நெசவாளனைத் தவிர மற்ற அனைவரும் திணறிக் கொண்டிருந்தனர். ஆகவே அவர்கள் அவனை நோக்கி எப்படி உன்னால் எல்லாவற்றையும் வெற்றிகரமாக செய்து முடிக்க முடிகிறது? என்று வினவினார்கள். அதற்கு அவன், “நான் அநேகதரம் அரசனைச் சந்திப்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? என்று கேட்டான். அதற்கு அவர்கள் “கவனித்தோம், ஆனால் அவர் அநேக காரியங்களை கவனிக்க வேண்டி இருக்க நீ அவரை அடிக்கடி தொந்தரவு செய்கிறாய் என்று எண்ணிணோம்” என்றார்கள். அதற்கு அந்த இளைஞன், “நான் அவருடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொண்டேன், அவரும் அப்படியே எப்பொழுதும் எனக்கு உதவி செய்வதில் பெரு மகிழ்ச்சி கொண்டார்!” என்று கூறினான்.
நநம்முடைய தேவனும் அந்த ராஜாவை போலத் தான் – ஆனால் இன்னும் சிறந்தவர். அவர் நம்முடைய சிறு தேவைகளையும் ஏக்கங்களையும் நிறைவேற்றும்படி நம்மேல் அன்பும், மனவுருக்கமும் உடையவராயிருக்கிறார்.