பரிபூரணர்களாக இருப்பது எப்படி?
எல்லாவற்றிலும் பரிபூரணமாய் இருக்க வேண்டுமென்ற உணர்வு கிறிஸ்மஸ் காலங்களில் மிகவும் அதிகமாக ஏற்படுகிறது. கிறிஸ்மஸை சிறந்த முறையில் கொண்டாடுவது பற்றி யோசித்து அதற்காக நமது முழு முயற்சியையும் பயன்படுத்துகிறோம். கடைகளுக்குச் சென்று சிறந்த பரிசுப் பொருட்களை தேர்ந்தெடுக்கிறோம். கிறிஸ்மஸ் தினத்தன்று சிறந்த உணவு தயாரிக்க வேண்டுமென்று திட்டமிடுகிறோம். சிறந்த வாழ்த்து அட்டைகளைத் தேர்ந்தெடுக்கிறோம். அல்லது சிறந்த குடும்பக் கடிதங்களை எழுதுகிறோம். நம்மால் செயல்படக்கூடிய திறமையைவிட, சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற கற்பனைத்திறன் மிக அதிகமாக இருப்பதால் நமது முயற்சிகள் மனச் சோர்விற்கும், ஏமாற்றத்திற்கும் நேராக…
தேவனை அறிந்து கொள்வதற்கான பசி
சீனாவிலுள்ள யுனான் மாகாணத்தின் மலைப்பகுதியில் வசிக்கும் அக்கா மலை ஜாதியில், வயது சென்ற அங்கத்தினரில் ஒருவர் அப்போ-லா-பை ஆவார். சமீபத்தில் சுவிசேஷ பணியின் போது அவரைச் சந்தித்தோம். கன மழையின் காரணமாக அந்தவார வேதாகம ஆராய்ச்சி வகுப்பிற்கு அவரால் செல்ல இயலவில்லை என்று எங்களிடம் கூறினார். ஆகவே அவர் எங்களிடம் “நீங்கள் எனக்கு வேதாகமத்தை போதிக்க இயலுமா” என்று கெஞ்சிக் கேட்டார்.
அப்போ-லா-பைக்கு வாசிக்கத் தெரியாது. ஆகவே வார வேதாகம போதனை வகுப்பு அவருக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. நாங்கள் அவருக்கு வேதாகமத்தை வாசித்து…
பாராசூட் நாய்கள்
இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்த பாராசூட் நாய்களைப்பற்றி அறிந்து மிகவும் ஆச்சரியப்பட்டேன். 1944 ஜூன் 6ம் தேதியான D-Day அன்று நேசப்படைகள் யுத்தத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த பொழுது, கண்ணி வெடிகள் நிறைந்த அப்பகுதியில், அந்த வெடிகள் புதைந்து இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து, அதனால் வர இருக்கும் ஆபத்தை முன்னதாகவே படை வீரர்களுக்கு அறிவிக்க, சக்திவாய்ந்த மோப்ப சக்தியுடைய நாய்களின் உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டது. எதிராளிகள் இருக்கக் கூடிய இடத்திற்கு அப்பால் இருந்த நேசப் படை வீரர்களிடம் இந்த மோப்ப நாய்களை பாராசூட்டு மூலம்…
ஈயைச் சுடுவது போல உள்ளது
2010, அக்டோபர் மாதத்தில் சிலி நாட்டைச் சேர்ந்த 33 சுரங்கத் தொழிலாளிகள் சுரங்கத்தில் ஏற்பட்ட ஒரு வெடி விபத்தினால் சுரங்கத்திற்குள் மாட்டிக் கொண்டார்கள். அவர்களை மீட்பதில், பூமிக்கடியிலுள்ள சுரங்கங்களின் வரைபடத்தை தெளிவாக கண்டு அறியக்கூடிய திறமையுடைய மக்கரீனா வால்டெஸ்ஸின் பங்கு மிக முக்கியமானது. பூமிக்கடியில் மாட்டிக்கொண்ட சுரங்கத் தொழிலாளர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அவ்விடத்தில் துளையிடுவது என்பது “700 மீட்டர் தூரத்திலிருக்கும் ஒரு ஈயைச் சுட முயற்சிப்பது போன்ற செயலாகும்” என்று மக்கரீனா கூறினாள். சுரங்கத்தைப் பற்றிய அவளது சிறந்த அனுபவத்தினால்,பூமியின் ஆழத்தில் சுரங்கத்…
டிக்கெட் மட்டும்
ஒரு பெண், அவளது சிறிய மகளை சிறுவருக்கான பாதுகாப்பு இருக்கை இல்லாமல், காரில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது, அதைப் பார்த்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி, போக்குவரத்து விதிகளை அந்தப் பெண் மீறினதிற்காக, குற்றப் பதிவு சீட்டை தந்திருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக அந்த காவல் அதிகாரி, அந்தத் தாயையும், மகளையும் அருகிலிருந்த ஒரு கடையில் சந்திக்கும்படி கூறினார். அங்கு அச்சிறு பெண்ணிற்கான ஒரு குழந்தை இருக்கையை அவரே விலைகொடுத்து வாங்கி அப்பெண்ணிடம் கொடுத்தார். அந்தப் பெண் அந்த இருக்கையை வாங்க இயலாத…