ஆலன் டெனன்ட் எழுதியுள்ள இறக்கையின் மேல் என்ற புத்தகத்தில், பிற பறவைகளைக் கொன்று தின்னும் இராஜாளி என்ற கழுகினம் இடம் பெயர்ந்து செல்லும் முறையைத் தொடர் பதிவு செய்வதற்காக, அவர் செய்த முயற்சிகளைப் பற்றி அவர் எழுதியுள்ளார். அழகு, வேகம், செயல்படும் திறனுடைய அப்பறவைகள், முற்காலத்தில் அரசர்கள், பிரபுக்கள் இவர்களுடைய வேட்டைத் தோழனாக பயன்படுத்தப்பட்டன. ஆனால் 1950களில் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்ட D.D.T என்ற பூச்சிக் கொல்லி மருந்தினால், அவைகளின் இனப்பெருக்கத்திறன் பாதிக்கபட்டதால், அவை வெகுவேகமாக அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
அழிந்து கொண்டிருக்கும் இந்த பறவை இனத்தை மறுபடியும் உயிர்ப்பிக்க, தெரிந்தெடுக்கப்பட்ட சில இராஜாளிகளின் உடலில் மின்னணு சமிக்கைகள் அனுப்பும் கருவியை இணைத்து அவைகள் இடம் பெயர்ந்து செல்லும் முறையை கண்டுபிடிக்க டெனன்ட் ஆர்வமாக இருந்தார். ஆனால் அவரும் அவர் சென்ற செசினா விமானத்தின் விமான ஓட்டியும் அந்தப் பறவைகளின் பின்னால் விமானத்தில் சென்ற பொழுது, அந்த மின்னணு கருவியிலிருந்து சமிக்கைகள் தொடர்ந்து கிடைப்பது தடைபட்டது. மிகவும் முன்னேற்றம் அடைந்த தொழில் நுணுக்க அறிவு இருந்தும் கூட, அவர்கள் உதவி செய்ய வேண்டுமென்று விரும்பின அந்த பறவைகள் செல்லும் வழியை அவர்களால் அறிய இயலவில்லை.
நம்மை கரிசனையுடன் கண்காணிக்கும் தேவன் நமது வழிகளை ஒருக்காலும் அறியாமல் இருக்கமாட்டார் என்பதை அறிந்து கொள்வது மிகவும் நல்ல செய்தியாக உள்ளது. ஒரு அடைக்கலான் குருவி கூட “உங்கள் பிதாவின் சித்தமில்லாமல் அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது… ஆதலால் பயப்படாதிருங்கள். அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” (மத்தேயு 10: 29-31) என்று இயேசு கூறியுள்ளார்.
நாம் கடினமான சந்தர்ப்பங்களை சந்திக்கும் பொழுது, தேவன் நமது நிலைமையை அறிந்துள்ளாரா என்று சந்தேகப்படுவதற்கு நமது பயம் காரணமாக இருக்கலாம். இயேசுவின் போதனைகள் தேவன் நம்மை இடைவிடாமல் கண்காணிக்கிறார் என்றும் அனைத்து நிலைமைகளையும் அவரது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார் என்று நமக்கு நிச்சயத்தை கொடுக்கிறது. நமது வாழ்க்கையைக் கண்காணிக்கும் தேவனுடைய செயல் ஒருக்காலும் தோல்வி அடையாது.