நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சியின் இறுதிக்கட்ட வேலைகளை முடிக்க அழகிய சேலைகளைக் கட்டிய பெண்கள், அங்கும் இங்கும் வேகமாக சென்று கொண்டிருந்ததால், அந்த அறை முழுவதும் மனதை ஈர்க்கக் கூடிய பலவர்ண நிறங்களால் நிறைந்திருந்தது. இந்தப் பெண்கள் முன்பு இந்தியாவில் வாழ்ந்தவர்கள். இப்பொழுது அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்கிறார்கள். ஆயினும் அவர்களது சொந்த நாட்டைப் பற்றிய கரிசனையுடன் இருந்தார்கள். இந்தியாவில் மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கான ஒரு கிறிஸ்தவ பள்ளியின் பொருளாதாரத் தேவையைப்பற்றி கேள்விப்பட்டதோடு நின்று விடாமல், அப்பள்ளியின் தேவையைச் சந்திக்க முழு மனதோடு செயல் பட்டார்கள்.
அக்காலத்தில் மிகவும் பிரசித்த பெற்ற அரசன் ஒருவனுக்கு, பானபாத்திரகாரனாக இருந்த நெகேமியா, தன் சொந்த நாட்டிற்காக, வளமான தன் வாழ்க்கையை விட்டுவிடத் தீர்மானித்தான். எருசலேமிலிருந்து வந்த மக்களிடம் எருசலேமைப்பற்றியும், அங்கு மீதமாக விடப்பட்ட மக்கள் நிலை பற்றியும் விசாரித்தான். (நெகே1:2) “சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அனுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும் அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது.” (நெகே 1:3) என்பதை அறிந்து கொண்டான்.
நெகேமியா அவனுடைய சொந்த தேசத்தில் விடப்பட்ட மக்களின் பரிதாபமான நிலைமையை மாற்றுவதற்கு ஏதாவது செய்யும்படி துக்கித்து, உபவாசித்து ஜெபித்தான். (வச.4) எருசலேமின் சுவர்களை திரும்பக் கட்டுவதற்கு, நெகேமியா எருசலேம் செல்ல தேவன் வழி நடத்தினார். (நெகே 1:2)
மகாப்பெரிய தேவனிடம் மிகப் பெரிய காரியங்கள் செய்யும்படி நெகேமியா கேட்டதால், அவனால் அவனுடைய ஜனங்களுக்கு மிகப் பெரிய காரியங்கள் செய்ய முடிந்தது. நம்மைச் சுற்றியிருக்கும் மக்களின் தேவைகளைச் காணத்தக்கதாக தேவன் நமது கண்களை திறக்கட்டும். உள்ளான பேர் ஆர்வத்துடன் பிறருடைய பிரச்சனைகளைத் தீர்த்து, பிறருக்கு ஆசீர்வாதமாக நாம் இருக்க தேவன் நமக்கு உதவி செய்வாராக.