யுத்தத்திற்கான கிரயத்தை யாராலும் செலுத்த இயலாது. 64 தேசங்கள் இப்பொழுது ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன என்று ஒரு இணையதளம் அறிவித்துள்ளது. அவை எப்பொழுது எவ்வாறு முடியும்? நாம் சமாதானத்தை விரும்புகிறோம், ஆனால் நீதியை விலைக்கிரயம் செலுத்தி அல்ல.
இயேசு சமாதானக் காலத்தில் பிறந்தார். ஆனால் அந்த சமாதானம் வன்முறையினாலும் அடக்கு முறையினாலும் ஏற்படுத்தப்பட்டது. ரோமர்கள் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை உடையவர்களை அடக்கு முறையினால் ஒழித்துக் கட்டினதினால், ரோமர்களின் ஆட்சியில் சமாதானம் இருந்தது.
சமாதானம் இருந்தது போல காணப்பட்ட அந்த நாட்களுக்கு, ஏழுநூற்றாண்டுகளுக்கு முன்பு, எதிராளிகளின் படை எருசலேமைத் தாக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. யுத்தத்தின் நிழலிருந்து தேவன் ஒன்றை அறிவித்தார். “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்”. (ஏசாயா 9:2) என்று தீர்க்கத்தரிசி அறிவித்தான். “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்… அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை” (ஏசாயா 9:6-7) என்ற ஏசாயாவின் தீர்க்க உரை கிறிஸ்துவின் பிறப்பில் நிறைவேறியது என்று மத்தேயு கூறுகிறார். (மத்தேயு 1: 22-23, மேலும் ஏசாயா 7: 14)ஐப் பார்க்கவும்.
முன்னணைக் காட்சியில் காணப்படும் இயேசு பாலகனை வணங்குகிறோம், ஆயினும் அந்த பெலனற்ற சிறு பாலகன் வல்லமையுள்ள கர்த்தராவார். “அவரே வானத்தின் சேனைகளின் கர்த்தர்” (ஏசா 13:13). அவர் ஒரு நாள் “தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இது முதற் கொண்டு என்றென்றைக்கும் நியாத்தினாலும், நீதியினாலும் நிலைப்படுத்துவார்” (ஏசாயா 9:7). அந்த ஆட்சியில் ஏற்பட்ட சமாதானம், ரோமர்களின் அடக்கு முறையினால் ஏற்பட்ட சமாதானம் போன்றதல்ல. அது சமாதான கர்த்தாவாகிய இயேசுவின் ஆட்சியாக இருக்கும்.