நான் சிறுவனாக இருந்தபொழுது பணம் சம்பாதிப்பதற்காக வீடுகளில் செய்தித்தாள் போட்டேன். அது காலை வெளியீடாக இருந்தபடியினாலும், நான் போட வேண்டிய 140 செய்தித்தாள்களையும் அந்தந்த வீடுகளிலே காலை 6 மணிக்கு சேர்க்க வேண்டியதிருந்தாலும், வாரம் 7 நாட்களிலும் நான் அதிகாலை 3 மணிக்கு எழும்ப வேண்டியதிருந்தது.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வருடத்தில் ஒருநாள் வேறுபட்டதாக இருந்தது. கிறிஸ்மஸ் நாளுக்குரிய காலை செய்தித்தாளை, கிறிஸ்மஸ்க்கு முந்தின நாள் மாலையே போட்டு விடுவோம். ஆகவே கிறிஸ்மஸ் அன்று மட்டும்தான் நான் மற்றவர்களைப் போல காலையில் நன்றாக உறங்கி ஓய்வு எடுக்க இயலும்.
கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு காரணங்களுக்காக கிறிஸ்மஸ் நாளை மிகச் சிறந்த நாள் என்று கருதினேன். அவற்றில் மிக முக்கியமான காரணம் என்னவென்றால் வருடத்தின் மற்ற நாட்களைப்போல கிறிஸ்மஸ் நாள் இல்லாமல், நான் நன்றாக ஓய்வு எடுக்கும் நாளாக இருந்ததே ஆகும்.
அந்த நாட்களில் கிறிஸ்மஸ் அளிக்கும் உண்மையான ஓய்வு பற்றி நாம் முழுமையுமாக அறிந்து கொள்ளவில்லை. நியாப்பிரமாணம் என்ற நுகத்தின் பாரத்தினால், அழுத்தப்பட்ட அனைவரும் பெற்று கொள்ள இயலாத ஓய்வை தமது மன்னிப்பினால் அருள கிறிஸ்து வந்தார் “வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 1:28) என்று இயேசு கூறினார்.
இந்த உலகிலுள்ள பாரங்களை தனிமையாக சுமக்க இயலாத நம்மை, அவரோடு கூட நெருங்கிய உறவில் இணைத்து நமக்கு ஒய்வு கொடுக்க கிறிஸ்து உலகத்திற்கு வந்தார்.