எல்லாவற்றிலும் பரிபூரணமாய் இருக்க வேண்டுமென்ற உணர்வு கிறிஸ்மஸ் காலங்களில் மிகவும் அதிகமாக ஏற்படுகிறது. கிறிஸ்மஸை சிறந்த முறையில் கொண்டாடுவது பற்றி யோசித்து அதற்காக நமது முழு முயற்சியையும் பயன்படுத்துகிறோம். கடைகளுக்குச் சென்று சிறந்த பரிசுப் பொருட்களை தேர்ந்தெடுக்கிறோம். கிறிஸ்மஸ் தினத்தன்று சிறந்த உணவு தயாரிக்க வேண்டுமென்று திட்டமிடுகிறோம். சிறந்த வாழ்த்து அட்டைகளைத் தேர்ந்தெடுக்கிறோம். அல்லது சிறந்த குடும்பக் கடிதங்களை எழுதுகிறோம். நம்மால் செயல்படக்கூடிய திறமையைவிட, சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற கற்பனைத்திறன் மிக அதிகமாக இருப்பதால் நமது முயற்சிகள் மனச் சோர்விற்கும், ஏமாற்றத்திற்கும் நேராக நடத்துகின்றன. மிகவும் சிரத்தையுடன் வாங்கின பரிசுப்பொருட்கள் அரைகுறை மனதுடன் கூடிய நன்றி உணர்வுடன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. கிறிஸ்மஸ் அன்று சிரத்தையுடன் தயாரிக்கப்பட்ட மதிய உணவின் ஒரு பகுதி மிக அதிகம் வெந்து விடுகிறது. கிறிஸமஸ் வாழ்த்து அட்டைகளை தபாலில் அனுப்பினபின் அதில் அச்சுப்பிழை உள்ளதை அறிகிறோம். சிறுவர்கள் விளையாட்டுச் சாமான்களைக் குறித்து சண்டை போடுகிறார்கள் பெரியவர்கள் பழைய வாதங்களை மறுபடியும் நினைவு கூர்ந்து அதைக் குறித்த வாதத்தில் ஈடுபடுகிறார்கள்.
இப்படியாக மனம் சோர்வடைவதற்குப்பதிலாக நமது ஏமாற்றங்களை பயன்படுத்தி கிறிஸ்மஸ் ஏன் மிகவும் முக்கியமானது என்பதற்கான காரணத்தை நினைவுபடுத்திக் கொள்ளலாம். கிறிஸ்மஸ் நமக்கு மிகவும் அவசியம். ஏனென்றால், நம்மில் ஒருவர் கூட ஒரு மாதத்திற்கோ, ஒரு வாரத்திற்கோ ஏன் ஒரு நாளுக்குக் கூட நாம் விரும்புகிறபடி வாழ இயலவில்லை, வாழவும் முடியாது. பூரணராக செயல்பட வேண்டும் என்ற தவறான எண்ணத்தை விட்டுவிட்டு நாம் நீதிமான்களாக்கப்படுத்துகிற, நமது இரட்சகரின் பரிபூரணத்தை நோக்குவோம் (ரோமர் 3:22) என்றால் நமது கிறிஸ்மஸ் கெண்டாட்டம் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
இந்த ஆண்டு கிறிஸ்மஸ் கொண்டாட்டம் நீங்கள் நினைத்தது போல சிறந்ததாக இல்லாமலிருந்தால் “என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிற” கிறிஸ்துவின் நீதியின் மேல் விசுவாசம் வைப்பதே (எபிரேயர் 10: 14) ஒரே வழி என்பதை நினைத்து நம்பி, மனம் தளர்ந்து போகாமல் அமைதியாக இருங்கள்.