ஒரு பெண், அவளது சிறிய மகளை சிறுவருக்கான பாதுகாப்பு இருக்கை இல்லாமல், காரில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது, அதைப் பார்த்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி, போக்குவரத்து விதிகளை அந்தப் பெண் மீறினதிற்காக, குற்றப் பதிவு சீட்டை தந்திருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக அந்த காவல் அதிகாரி, அந்தத் தாயையும், மகளையும் அருகிலிருந்த ஒரு கடையில் சந்திக்கும்படி கூறினார். அங்கு அச்சிறு பெண்ணிற்கான ஒரு குழந்தை இருக்கையை அவரே விலைகொடுத்து வாங்கி அப்பெண்ணிடம் கொடுத்தார். அந்தப் பெண் அந்த இருக்கையை வாங்க இயலாத பொருளாதார நெருக்கடியில் இருந்தாள்.

அந்தப் பெண் செய்த தவற்றிற்கு அபராதத் தொகையை கட்ட வேண்டும் என்ற தண்டனைக்குப் பதிலாக ஒரு பரிசைப் பெற்றாள். கிறிஸ்துவை அறிந்தயாவரும் அதைப் போன்ற அனுபவத்தையே பெறுவார்கள். தேவனுடைய கட்டளையை மீறினதினால், நாம் அனைவருமே தண்டனைக்கு உரியவர்களாகிறோம். ஆயினும் இயேசுவினால், நாம் பெற்றுக் கொள்ளுவதற்கு தகுதியில்லாத கிருபையை தேவனிடமிருந்து பெற்றுக் கொள்கிறோம். இந்தக் கிருபை, நமது வாழ்க்கையின் இறுதியில் நமது பாவங்களுக்காக பலனை அதாவது தேவனிடமிருந்து நித்திய காலமாய் பிரிக்கப்படுவதிலிருந்து நம்மை மீட்கிறது. (ரோமர் 6:23) “அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. (எபேசியர் 1:7)

சிலர் கிருபையை “செயல்படும் அன்பு” என்று குறிப்பிடுகின்றனர். மேலே கூறப்பட்ட அந்த இளம் தாயார் காவலரின் செயல்படும் அன்பை அனுபவித்தாள். அவள் பின்னொரு காலத்தில் “நான் எப்பொழுதும் நன்றியுள்ளவளாக இருப்பேன்… என்னால் அதற்கான கிரயத்தை செலுத்த இயலும் பொழுது அதை அனுப்பிவிடுவேன்” என்று கூறினாள் அந்தக் காவல் அதிகாரி கொடுத்த, அந்த பரிசுக்காக பரந்த மனதுடனும், நன்றியுள்ள இருதயத்துடனும் மாறுத்தரம் கூறின அந்தப் பெண்ணின் மறு மொழி, தேவனுடைய கிருபையை பெற்றுக் கொண்ட நமக்கு எழிச்சியூட்டும் முன்மாதிரியாக உள்ளது.