ஓவ்வொரு ஆண்டும் எங்களது ஊர் தாவரஇயல்பூங்கா, உலகமெங்கும் பல்வேறு முறைகளில் நடக்கும் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை கண் காட்சியாக காண்பிக்கும் பொறுப்பை திறம்பட நடத்துகிறது. அதில் எனக்கு மிகவும் பிடித்தமான காட்சி பிரான்ஸ் தேசத்து கிறிஸ்மஸ் குடில் காட்சியாகும். வழக்கமாக மேய்ப்பர்கள், பொன், தூபவர்க்கம், வெள்ளைப்போளம் ஆகியவற்றை முன்னணையில் படைக்கும் ஞானிகள் அடங்கிய காட்சியாக இல்லாமல், பிரான்ஸ் தேசத்து கிராமப்புற மக்கள் அவர்களது பரிசுகளை பாலகன் இயேசுவுக்கு படைக்கும் காட்சியாக அது இருந்தது. அவர்கள் ரொட்டி திராட்ச ரசம், பாலாடைக் கட்டி, பூக்கள் போன்ற தேவன் அவர்களுக்கு அருளிய பொருட்களைக் கொண்டு வந்தார்கள். இது, முதற்கனியை ஆசரிப்புக் கூடாரத்திற்கு கொண்டு வாருங்கள் என்று பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள கட்டளையை எனக்கு நினைப்பூட்டியது. (யாத் 23:16-19) மேற்கண்ட முறையில் காட்சிப்படுத்தப்பட்ட முன்னணை காட்சி, நமக்குள்ள அனைத்தும் தேவனிடமிருந்து வருகிறது என்றும் ஆகவே நாம் கொடுக்க வேண்டிய ஒரே பொருள், தேவன் நமக்குத் தந்தருளியதிலிருந்து அவருக்கு திரும்ப கொடுப்பதாகும்.
ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளுக்கு அவர்களது சரீரத்தை ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று பவுல் கூறின பொழுது, தேவன் அவர்களுக்கு கொடுத்துள்ளதை அதாவது அவர்களையே தேவனுக்குத் திரும்பச் கொடுக்குமாறு கூறியுள்ளார். (ரோமர் 12:1) தேவன் நம்முடைய வாழ்வாதாரத்திற்காக சம்பாதிக்கக் கூடிய திறமையும், மேலும் தேவன் நமக்கு அருளியுள்ள வரங்களும் இதில் அடங்கும். சிலர் தாவீதைப் போல இசையில் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். (1சாமுவேல் 35: 30-35) வேறு சிலர் எழுதுவது, போதிப்பது, தோட்ட வேலை செய்வதுபோன்ற பல்வேறு திறமைகளைப் பெற்றிருக்கலாம்.
தேவன் நமக்கு முதலில் அருளியுள்ள ஈவுகளை திரும்ப தேவனுக்கே நாம் கொடுக்கும் பொழுது, நாம் அவருக்குச் சிறந்த பரிசாகிய நம்மையே கொடுக்கிறோம்.