எரிச்சலுள்ள நமது தேவன்
2014ம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர், ஓர் இறந்துபோன நாயின் உள்பகுதியை நீக்கிவிட்டு அதைப் பஞ்சினாலும், வைக்கோலாலும் அடைத்தார். பின்பு அந்த பொம்மை நாயைப் பயன்படுத்தி மிருகங்களும் கூட பொறாமைப்படக்கூடியவை என்று காண்பித்தார். கிறிஸ்டியன் ஹாரிஸ் என்ற அந்தப் பேராசிரியை நாய்களுக்கு சொந்தமானவர்கள், அவர்களது செல்லப் பிராணிகளுக்கு முன்பாக பஞ்சடைக்கப்பட்ட நாய்பொம்மையைக் கொஞ்சி விளையாடும்படி கேட்டார். அதைக்கண்ட அநேக நாய்கள் வெளிப்படையாக அவற்றின் பொறாமையை வெளிப்படுத்தின. சில நாய்கள் அவற்றின் எஜமான்களை மெதுவாகத் தொடுவதின் மூலமாகவோ, அல்லது இலேசாக மோதுவதின் மூலமாகவோ…
அனுதினமும் சலிப்படைதல்
நான் படித்து வந்த உயர்நிலைப் பள்ளியில் நான்கு ஆண்டுகள் இலத்தீன் மொழியைக் கற்றுக் கொள்வது அவசியமாக இருந்தது. அவ்வாறு கஷ்டப்பட்டு இலத்தீன் மொழியை படித்ததை இப்பொழுது நினைவு கூர்ந்து மகிழ்ச்சி அடைகிறேன். அதைப் படித்து வந்தபொழுது, அது மிகவும் சலிப்பூட்டுவதாக இருந்தது. மறுபடியும், மறுபடியும் சொல்லி பயிற்றுவிப்பதில் எனது ஆசிரியர் நம்பிக்கை உடையவராக இருந்தார். “மறுபடியும், மறுபடியும் சொல்லுவதே கற்றுக் கொள்வதற்கான மூல ஆதாரம்” என்று எனது ஆசிரியர், ஒரு நாளில் பலமுறை கூறுவார்;. மறுபடியும், மறுபடியும் கூறுதல் மிக அவசியமானது என்று கூறுவதை…
ஞானிகளின் வார்த்தைகள்
எனது சகோதரனின் மருமகன் ஒரு சமூக வலைத்தளத்தில் கீழ்க்கண்ட வார்த்தைகளை எழுதினார். “மெல்லிய சத்தத்தில் செய்ய வேண்டாமென்று எனக்குள்ளாக வார்த்தைகள் கேட்கப்படாமல் இருந்திருந்தால், நான் இன்னும் அதிகமாக இணயதளத்தில் சொல்லி இருப்பேன். கிறிஸ்தவ விசுவாசிகளாக நீங்கள் அந்த மெல்லிய சத்தம் பரிசுத்த ஆவியானவருடையது என்று எண்ணுவீர்கள். அப்படி இல்லை. அது என் மனைவி ஹெய்டியின் சத்தமே”
சிரிப்புடன் கூட ஒரு தெளிவான எண்ணமும் வருகிறது. உண்மையான தன்மையை அறியக்கூடிய ஒரு சிநேகிதனின் எச்சரிப்புகள், தேவனின் ஞானத்தைப் பிரதிபலிக்கலாம். “ஞானிகளுடைய அமரிக்கையான வார்த்தைகளே கேட்கப்படத்தக்கவைகள்” என்று…
தண்ணீரும், வாழ்க்கையும்
டேவ் மியூல்லர் கீழே இறங்கி குழாயின் கைப்பிடியை திறந்தவுடன், குழாயிலிருந்து சுத்தமான நீர், கீழே வைக்கப்பட்டிருந்த நீல நிற வாளியில் கொட்டியது. சுற்றியிருந்த மக்கள் நீரைக் கண்டவுடன் கைதட்டி ஆரவாரித்து மகிழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்து வந்த சமுதாயத்தின் முதல் முறையாக சுத்தமான குடிநீரைக் கண்டதால் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். கென்யாவில் வசித்த அந்த பகுதி மக்களுக்கு கிடைத்த சுத்தமான குடிநீர், அம்மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைக்கிறது.
சுத்தமான நீரை அந்த மக்களுக்கு வழங்குவதின் மூலம் அவர்களது தேவைகளை சந்திக்க டேவ்வும், அவரது மனைவி…