நமது நண்பர்களை இயேசுவிடம் அழைத்து வருதல்
எனது சிறு பிள்ளைப்பிராயத்தில் உலகை மிகவும் அச்சுறுத்தக் கூடிய வியாதி “போலியோ” என்ற இளம் பிள்ளைவாதமாகும்.” ஏனெனில் அதனால் அதிகமான அளவு சிறுபிள்ளைகள் தான் பாதிக்கப்பட்டார்கள். 1950களின் மத்தியில் போலியோவிற்கு தடுப்பு ஊசி கண்டுபிடிப்பதற்கு முன்பு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் 20,000 பேர் போலியோவினால் பாதிக்கப்பட்டதோடு, ஏறக்குறைய 1000 பேர் அதனால் ஒவ்வொரு ஆண்டும் மரித்தார்கள்.
ஆதிக்காலத்தில் திமிர்வாதம் என்பது குணமாக்க இயலாத நிரந்தரமான நம்பிக்கையற்ற நிலை என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் ஒரு கூட்ட மக்கள் திமிர்வாதத்தினால் பாதிக்கப்பட்ட அவர்களது சிநேகிதனை…
பெயரைச் சொல்லுங்கள்
ஒரு திருச்சபையிலிருந்த ஒரு குழுவினர் அவர்களது கூடுகையில் செய்தி அளிப்பதற்காக ஒரு செய்தியாளரை அழைத்தார்கள். “ தேவனைப்பற்றி பேசுங்கள் ஆனால் இயேசுவை விட்டு விடுங்கள்” என்று அந்தக் குழுவின் தலைவர் செய்தியாளரிடம் கூறினார்.
மிகவும் அதிர்ச்சி அடைந்த அந்த மனிதர் “ஏன்” என்று கேட்டார். “எங்களது குழுவிலுள்ள சில முக்கிய அங்கத்தினர்கள் இயேசு என்றால் சங்கடப்படுகிறார்கள். ஆகவே கடவுள் என்ற சொல்லை மட்டும் பயன்படுத்துங்கள், அப்பொழுது நாங்கள் நன்றாக உணருவோம்” என்று அந்தத்தலைவர் விளக்கினர்.
அவர்கள் கூறின கட்டளைகளை ஏற்றுக்கொள்வது செய்தியாளருக்கு பெரிய பிரச்சனையாக…
என் கைகளை அவர் பழக்குவிக்கிறார்.
டேவிட் உட் என்ற NBAயின் முன்னாள் விளையாட்டு வீரர், டாக்ரஸ் டி பாஸ்கோனியா சார்பில் விளையாடிய பொழுது ஸ்பானியா நாட்டு கூடைப்பந்து விளையாட்டில் இறுதிக் கோப்பைக்கான போட்டியில் அவரோடு கூட நான் இருந்தேன். ஒரு போட்டிக்கு முன் அவர் “என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று சங்கீதம் 144:1 ஐ வாசித்தார். பின்பு என்னிடம் திரும்பி “பார் தேவன் இந்த வசனத்தை எனக்காகவே எழுதியுள்ளார். துள்ளி வரும் பந்துகளைப் பிடிக்கவும் பந்தை சரியான முறைகளில்…
கோபத்துடன் கூடிய ஜெபங்கள்
குளிர் காலத்தில் ஒரு நாள், எனது தோட்டத்தில் பனிவாரிக்கருவியை எனது கைகளில் இறுகப் பிடித்துக் கொண்டு, மிகவும் கோபத்துடனும், வேகத்துடனும் மூலையிலிருந்த மழை நீர் வெளியேற்றுக் குழாயை அடைத்துக் கொண்டிருந்த உறை பனியை நீக்கி கொண்டிருந்தேன். என்னை அவர்களது ஜன்னல்களின் வழியாகப் பார்த்த என் அயலகத்தார் என்னைக் குறித்து என்ன எண்ணுவது என்று ஒருவேளை அவர்களுக்கே தெரியாதிருக்கும். நுண் பனியை நீக்கும் பொழுது ஒவ்வொரு காலடி வைக்கும் பொழுது “என்னால் இதைச் செய்ய இயலாது, இதைச் செய்ய எனக்கு பெலன் இல்லை” என்பது பற்றிய…