Archives: அக்டோபர் 2015

ஒவ்வொரு வினாடியும் முக்கியம்

24 மணிநேரத்தை ஒரு நாளுக்குள் அடக்கினால் “70 ஆண்டு வாழும் சாதாரண வாழ்க்கை இப்பொழது எனது வாழ்க்கையில் மாலை 8:30 மணி நேரமாக இருக்கும். காலம் வெகு வேகமாக கடந்துபோகிறது” என்று எனது 59 வயது சிநேகிதன் பாப் போர்ட்மேன் எழுதினான். இவ்வுலகில் நாம் வாழும் காலம் மிகவும் குறுகியது என்ற உண்மை “டிக்கர்” என்ற கைக்கடிகாரத்தை உருவாக்கும் எண்ணத்தைக் கொடுத்தது. நேரத்தை காண்பிக்கும் அந்தக்கடிகாரம் இந்த உலகில் நீங்கள் வாழ இருக்கும் காலத்தை கணக்கிட்டு உங்களது வாழ்க்கையில் எஞ்சியுள்ள காலத்தைக் கணக்கிட்டுக் கூறும்.…

அற்புத மழை

சீனாவில் யூனான் மாகாணத்தில் மலைப்பாங்கான பகுதியில் வாழ்ந்து வரும் கிராம மக்களின் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. அவர்களது முக்கிய உணவு சோளமும், அரிசியுமாகும். 2012ம் ஆண்டு பயங்கரமான வறட்சி அப்பகுதியை தாக்கினதினால் பயிர்கள் அனைத்தும் வாடிவிட்டன. அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் அனைவரும் மிகவும் கவலைப்பட்டார்கள். மூட நம்பிக்கையுள்ள அநேக செயல்களின் மூலம் வறட்சியை நிறுத்த மக்கள் முயன்றார்கள். எதுவுமே பயனளிக்காமல் போன பொழுது அங்கு வாழ்ந்து வந்த 5 கிறிஸ்தவர்கள் அந்த மக்கள் மூதாதயருடைய ஆவிகளை வருத்தப்படுத்தினதினால்தான் வறட்சி நிலவுகிறதென்று…

விழித்தெழுவதை விடச் சிறந்தது

உங்கள் வாழ்வைப் பாழாக்கின அல்லது குற்றப்படுத்துகிற செயலைச் செய்ததினால் உங்களது வாழ்க்கையே அழிந்துபோனதென்று எப்பொழுதாவது உணர்ந்துள்ளீர்களா? ஆனால் தூக்கத்திலிருந்து எழும்பினவுடன் அது ஒரு கனவுதான் என்று உணர்ந்துள்ளீர்களா? அது ஒரு கோரக்கனவாக இல்லாமல் உண்மையாயிருந்தால்? அந்த சூழ்நிலை உங்களுக்கோ அல்லது நீங்கள் நேசிக்கும் ஒருவருக்கோ, உண்மையான நிகழ்ச்சியாய் இருந்திருந்தால் எப்படியாக உணர்வீர்கள்?
19ம் நூற்றாண்டில் ஜார்ஜ் மெக்டனோல்டினால் எழுதப்பட்ட த கியுரேட்ஸ் அவேக்கனிங் என்ற நாவல் சந்தித்த முரண்பாடு இது போலவே இருந்தது. அந்தக்கதை அவரே நம்பாத ஒரு கடவுளைப்பற்றி பேசி வந்ததைக் கண்டறிந்த…

நம்மிடம் பழங்கள் உண்டு

ஒரு இளம் தாயார் பெருமூச்சுடன் அவளது மூன்று வயது மகளுக்கான மதிய உணவைப் பாத்திரத்திலிருந்து சுரண்டி எடுத்துக் கொண்டிருந்தாள். அவளது சிறிய சமையல் அறையிலிருந்த மேஜையின் மேல் இருந்த காலியான பழக்கூடையைப்பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டே “ஒரு கூடை நிறைய நமக்குப் பழங்கள் இருந்தால் பணக்காரனைப் போல உணருவேன்” என்று சத்தமிட்டுக் கூறினாள். அவளது சிறியமகள் அதைக் கேட்டாள்.
வாரங்கள் கடந்தன ஆயினும் தேவன் அச்சிறிய குடும்பத்தைப் பராமரித்து வந்தார். வறுமையினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அந்த இளம் தாய் மிகவும் கவலைப்பட்டாள். பின்பு ஒரு…