Archives: அக்டோபர் 2015

சிலுவையும் கிரீடமும்

லண்டனிலுள்ள வெஸ்ட் மினிஸ்டர் ஆபி என்ற ஆலயம் மிகவும் சரித்திரப் புகழ் வாய்ந்தது. பத்தாம் நூற்றாண்டில் பெனிடிக்டைன் குழுவைச் சேர்ந்த சமயத்துறவிகள் அனுதினம் வழக்கமாக அங்கு கூடி ஆராதித்து வந்தார்கள். இன்றும் கூட அந்த ஆராதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆபி என்ற அந்த இடம் அநேக புகழ்பெற்ற மனிதர்களை அடக்கம் செய்யும் இடமாகவும் உள்ளது. 1066ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆங்கிலேய மன்னரும் இங்கு தான் முடி சூட்டப்பட்டு வருகிறார்கள். அதில் 17 மன்னர்கள் அங்கேயே அடக்கம் பண்ணப்பட்டுள்ளார்கள். எங்கு அவர்களது ஆட்சி துவங்கினதோ…

கரடுமுரடான பாதை

இடாகோவிலுள்ள ஜக்ஹேன்டில் என்ற மலையின் வட பகுதியின் உச்சியிலிருந்த ஓர் ஏரியைப் பற்றி மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த எனது சிநேகிதன் என்னிடம் கூறினான். கட்துரோட் வகையைச் சார்ந்த பெரிய டிரவுட் மீன்கள் மிக அதிகமாகக் அங்கு காணப்படுகின்றன என்ற வதந்தி உள்ளது. என்னுடைய சிநேகிதன் ஒரு பென்சிலையும் பேப்பரையும் எடுத்து அந்த ஏரிக்குச் செல்ல வேண்டிய வழியை வரைபடமாக அதில் வரைந்து காண்பித்தான். அநேக வாரங்கள் கழித்து எனது டிரக் வண்டியில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு எனது சிநேகிதன் கூறியிருந்த திசையை பின்…

பரலோகத்தில் பொக்கிஷம்

புதிதாகக் கட்டப்பட்ட எங்களது வீட்டில் கொடுக்கப்பட்ட மோசமான மின் இணைப்பினால், எங்களது புதிய வீடு தீப்பிடித்து எரிந்து போனது. ஒரு மணி நேரத்திற்குள்ளாக நெருப்பின் சுவாலை எங்கள் வீடு முழுவதையும் எரித்து சாம்பலாக்கி விட்டது மிஞ்சினது கட்டிடத்தின் இடிபாடுகள் தான். முன்னொரு முறை ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆராதனை முடிந்து வீடு திரும்பின பொழுது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டிலுள்ள சில பொருட்கள் திருடப்பட்டிருந்தன.
குறைபாடுள்ள இவ்வுலகில் உலகப்பிரகாரமான ஆஸ்திகளை இழப்பது மிகவும் சாதாரணகாரியம். உதாரணமாக வாகனங்கள் திருடப்படுகின்றன, அல்லது மோதி விபத்திற்குள்ளாகின்றன, கப்பல்கள் மூழ்குகின்றன,…

தேவனுடைய வழி

100 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் உலகப் போரின்போது, Y.M.C.A. சார்பாக பிரிட்டனின் நேச நாடுகளின் படைவீரர்களுக்கு போதகராகப் பணியாற்ற 41 வயதுடைய ஆஸ்வால்டு சேம்பர்ஸ் எகிப்திற்கு சென்றார். கெய்ரோவிற்கு 6 மைல் தூரம் வடக்கே இருந்த செய்டூன் முகாமில் பணி செய்ய அவருக்கு உத்தரவிடப்பட்டது. அங்கு தங்கி இருந்து முதல் நாள் இரவு, அதாவது 1915, அக்டோபர் 27ம் தேதி அன்று “இங்குள்ள படைவீரர்கள் உள்ள பகுதி பாலைவனம் போன்று உள்ளது. தேவனுக்கென்று பணிசெய்ய மிகச்சிறந்த சந்தர்ப்பம். இது போன்ற சூழ்நிலையில் நான் ஒருபொழுதும்…

எல்லாரும் பத்திரமாயிருக்கிறார்கள்! எல்லாரும் நலமாயிருக்கிறார்கள்!

1915ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம்தேதி என்டுயுரன்ஸ் என்ற கப்பல், அன்டார்ட்டிக்காவில் பனிப்பாறைகளில் சிக்கி உடைந்து போனது. அக்கப்பலிருந்த துருவப்பிரதேச ஆராய்ச்சியாளர்கள் குழு, ஏர்னெஸ்ட் ஷேக்கில்டன் தலைமையில் கப்பல் சேதத்திலிருந்து தப்பி மூன்று உயிர்காக்கும் படகுகளின்மூலம் எலிபென்ட் தீவை அடைந்தார்கள். ஆட்கள் வசிக்காத அந்த தீவு கப்பல் போக்குவரத்து நடக்கும் கடல் பரப்பிலிருந்து வெகுதூரத்தில் இருந்தது. அவர்களுக்கு ஒரே ஒரு நம்பிக்கை இருந்தது. 1916ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி ஷேக்கில்டனுடன் ஐந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு சிறிய உயிர்காக்கும் படகில் உதவி பெறுவதற்காக…