2011ம் ஆண்டு செப்டம்பர் மாத துவக்க நாட்களில் மத்திய டெக்ஸாசிலுள்ள பாஸ்ட்ராப் என்ற நகரிலும், அதைச் சுற்றிலுமிருந்த 600 வீடுகளை பயங்கரமான காட்டுத்தீ அழித்து நிர் மூலமாக்கிவிட்டது. சில வாரங்கள் கழித்து ஆஸ்டின் அமெரிக்கன் ஸ்டேட்மேன் என்ற பத்திரிக்கையில் “அநேகத்தை இழந்த மக்கள், இழக்காத பொருட்கள்மீது கவனத்தைச் செலுத்தினார்கள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. இந்தக் கட்டுரை, சமுதாயத்தினர் தாராளமாய்ச் செய்த உதவிகளையும், உதவி பெற்றோர், தாங்கள் இழந்தவற்றைவிட, உதவிய அயலகத்தார் நண்பர்கள், சமுதாயத்தினரை அதிக மேன்மையாகக் கருதினர்.
முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அவர்களது விசுவாசத்தின் ஆரம்ப நாட்களில் எப்படியாக துன்பத்தைத் தைரியமாக சகித்தார்கள் என்பது பற்றி எபிரேய புத்தகத்தின் ஆக்கியோன் நினைவுபடுத்துகிறார். அவர்களுக்கு ஏற்பட்ட நிந்தை, கொடுமை அனைத்திலும், சக விசுவாசிகளோடு தோள் கொடுத்து நின்றார்கள். (எபிரேயர் 10:32-33) “நான் கட்டப்பட்டிருக்கையில்… உங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாய்க் கொள்ளையிடக் கொடுத்தீர்கள்” (எபிரேயர் 10:34) என்ற வசனத்தின்படி அவர்களது கவனம், அவர்கள் இழந்து போன காரியங்களைப்பற்றி இல்லாமல் அவர்களை விட்டு எடுபடாத நித்தியத்திற்கான காரியங்களைப் பற்றியே இருந்தது.
“உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” (மத்தேயு 6:21) என்று இயேசு அவரைப் பின் பற்றுகிறவர்களிடம் கூறினார். தேவன் மீதும், அவரில் நமக்கு உண்டான கிருபையின் மீதும், நாம் நமது கவனத்தை செலுத்தும்பொழுது, நாம் விலையேறப் பெற்ற பொருட்கள் என்று எண்ணுபவைகளைக் கூட நாம் முக்கியமற்றவைகள் என்று கருதலாம்.