டீஜிட்டல் முறையில் (Digital) கணினியில் வெளியிடப்படும் இதழ்களை வாசிப்பதில் பழக்கப்பட்டுவிட்டேன். இதன் மூலம் மரங்களைக் காப்பாற்றுகிறேன் என மன மகிழ்ச்சி அடைகிறேன். அத்தோடு கூட தபாலில் மாத இதழ் வருவதற்காக நான் காத்திருக்கத் தேவை இல்லை. ஆனால் அச்சிடப்பட்ட காகிதத்தை வாசிக்காததால் அதிகம் மனம் வருந்துகிறேன். ஏனெனில் பளபளப்பான அந்த காகிதத்தின் பக்கங்களை என் விரல்களால் தடவிப் பார்ப்பது எனக்கு இனிமையான அனுபவமாகும். அதில் வெளியாகும் முக்கிய சமையல் குறிப்புகளை வெட்டி எடுக்கும் சந்தர்ப்பத்தையும் இழந்ததால் மனம் வருத்தமடைகிறேன்.
கணினியின் மூலம் வாசிக்கக்கூடிய டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்ட வேதாகமும் என்னிடத்தில் உண்டு. ஆனால் எனக்கு மிகவும் விருப்பமான அச்சிடப்பட்ட வேதாகமம் இன்னமும் என்னிடத்திலுள்ளது. அதில் அதிக முக்கியமான பகுதிகளை கோடிட்டு வைத்து பலமுறை வாசித்திருக்கிறேன். அச்சிடப்பட்ட பக்கங்களின் நிலைமை எதிர்காலத்தில் என்னவாகும் என்று நமக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். தேவனுடைய வார்த்தைகள் இருக்க வேண்டிய இடம், நமது கைப் பேசிகளோ, மின்னணு கருவிகளோ படுக்கை அண்டையிலுள்ள மேஜைகளோ கிடையாது.
“உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்” (வச.11) என்று சங்கீதம் 119ல் வேத வசனங்களை நமது இருதயங்களில் பொக்கிஷமாக பதித்து வைக்க வேண்டும் என்று வாசிக்கிறோம். தேவனுடைய வசனங்களை ஆராய்ச்சி செய்வதற்கும், தேவனைப்பற்றி அதிகமாக அறிந்து கொள்வதற்கும், அவற்றை நமது அன்றாட வாழ்க்கையில் பயிற்சி செய்வதற்கும் ஈடாக எதையும் ஒப்பிட முடியாது. தேவனுடைய வார்தைகள் இருக்க வேண்டிய சிறப்பான இடம் நமது இருதயமே.
தேவனுடைய வசனத்தை வாசிக்காமல், தியானிக்காமல் மனப்பாடம் செய்யாமலோ இருப்பதற்கு பல சாக்குப்போக்குகளை நாம் கூறலாம். ஆனால் தேவனுடைய வசனங்கள் நமக்கு நிச்சயமாகத் தேவைப்படுகின்றன. தேவனுடைய வசனங்கள் சிறப்பான இடத்தில் அதாவது நமது இருதயங்களில் பாதுகாத்து வைக்கப்பட தேவன் நமக்கு உதவி செய்ய நான் ஜெபிக்கிறேன்.
எனது இருதயத்தில் மறைந்துள்ளது.
வாசிப்பு: சங்கீதம் 119 : 9-16 | ஓராண்டில் வேதாகமம்: எரேமியா 9-11 & 1 தீமோத்தேயு 6
உமது வாக்கை என்னிருதயத்தில்
வைத்து வைத்தேன்.
(வச. 11)
தேவனுடைய வார்த்தைகள் இருக்க வேண்டிய
சிறப்பான இடம் நமது இருதயங்களே.
Our Daily Bread Topics:
odb