எங்களது திருச்சபையின் வெளி ஊழியத்தின் நிறைவு நிகழ்ச்சி, நகரில் ஒரு ஆராதனையோடு முடிவடைந்தது. அந்த ஊழியத்திற்காக திட்டமிட்டு செயல்பட்ட குழுவிலிருந்த எங்கள் திருச்சபையின் வாலிப ஐக்கியத்தின் இசைக் குழுவினர், ஆலோசகர்கள், திருச்சபையின் தலைவர்கள் ஆகியோர் அந்த இறுதி நாளில் மேடைக்கு வந்தார்கள். உடனே நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியினால் கைகளைத் தட்டி அவர்களது கடினமான ஊழியத்திற்காக அவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்தினோம்.
அந்தக் குழுவில் ஒரு மனிதர், ஒருவராலும் காணப்படாமலே இருந்தார். ஆனால் அவர்தான் அக்குழுவின் தலைவர், ஒரு சில நாட்களுக்குப் பின் அவரை நான் பார்த்த பொழுது அவரது ஊழியத்திற்காக அவருக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்து “அந்த நிகழ்ச்சியின் போது உங்களை நாங்கள் பார்க்கவே இல்லையே” என்று கூறினேன்.
“பின்னணியத்தில் பணி செய்வதையே நான் விரும்புகிறேன்” என்று அவர் கூறினார். எல்லாராலும் அவர் அறியப்பட வேண்டும் என்பதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. பணி செய்தவர்கள் பாராட்டப்பட வேண்டிய நேரம் அது என்றார்.
அவருடைய அமைதியான நடத்தை எனக்கும் ஒரு பெரிய பிரசன்னமாகவே இருந்தது. தேவனுக்கு நான் ஊழியம் செய்யும் பொழுது, பிறரால் நான் அடையாளம் கண்டுகொள்ளப்பட வேண்டும் என்று விரும்பத் தேவையில்லை வெளிப்படையாக பிறரால் நான் பாராட்டப்பட்டாலும், படாவிட்டாலும் தேவனுக்கு நான் மகிமையைச் செலுத்தலாம். கிறிஸ்துவுக்கே முதலிடம் என்ற எண்ணம், அற்பத்தனமான,பொறாமை அல்லது வேண்டாத போட்டி மனப்பான்மை அனைத்தையும் செயலற்றதாக்கி விடுகிறது.
“எல்லாரிலும் மேலான” இயேசு பெருகவும் நான் சிறுகவும்” வேண்டும் (வச.3:30,31) என்ற எண்ணத்தை நாம் கொண்டிருந்தால் தேவனுடைய ஊழியம் வளர்ந்து பெருகுவதையே நாம் விரும்புவோம். நாம் செய்யும் அனைத்து செயல்களிலும், நாமல்ல கிறிஸ்துவே மையமாக இருக்க வேண்டும்.