நான் வசிக்கும் பகுதியில் தாவரங்களில் சில பகுதிகள் பூமிக்கு அடியிலேயே சில காலம் இருந்து விட்டு, மறுபடியும் முளைத்து வெளியே வரக்கூடிய காலமாகும். பூமியியே பனி விழுந்து தரை உறைந்து போகும் முன்பு தாவரங்கள் அழகாக பூத்துக் குலுங்குகின்றன. பனிக்காலம் முடிந்து மறுபடியும் வசந்தகாலம் வரும் வரை பூமிக்கடியில் மறைந்திருக்கின்றன. பனியிலே இறுகிப்போன மண் இளக்கமானவுடன், இவை மறுபடியும் தங்கள் தலைகளை வானத்திற்கு நேராய் உயர்த்துகின்றன. உயர்த்தி பற்பல வண்ணப் பூக்களால் தங்கள் சிருஷ்டிகரை ஆராதிக்கின்றன.
நமது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் செயலற்று அமைதியாக சிறிது காலம் இருப்பது தேவைப்படுகிறது. நாம் மரித்து விடவில்லை. ஆனால் ஒருவராலும் கவனிக்கப்படாமல் மறைந்துவிட்டோம் என்ற உணர்வைப் பெறுகிறோம். அப்படிப்பட்ட சமயங்களில் பயனற்றவர்களாக நாம் இருக்கிறோம் என்றும், மறுபடியும் நம்மை பயன்படுத்த தேவனால் இயலுமா என்றும் எண்ணுவோம். ஆனால் அப்படிப்பட்ட சமயங்கள் நமது பாதுகாவலுக்காகவும், எதிர்காலத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்தவும் பயனுள்ளதாக உள்ளது. காலமும், சூழ்நிலையும் ஏற்றதாக இருக்கும் பொழுது, தேவன் அவரை ஆராதித்து சேவை செய்ய நம்மை மறுபடியும் அழைப்பார்.
மோசே இப்படிப்பட்ட ஒருகால கட்டத்தை கடந்து வந்தான். ஒரு எபிரேயனை கொலை செய்த எகிப்தியனை மோசே கொலை செய்ததினால் அவன் ஜீவனை காத்துக்கொள்ள வெகு தூரத்திலிருந்த மீதியான் தேசத்திற்கு ஓடிப்போக வேண்டியிருந்தது. (யாத் 2:11-22) அங்கு தேவன் அவனைப் பாதுகாத்து அவனது வாழ்க்கையில் அவன் செயல்பட வேண்டிய மிகமுக்கியமான பணிக்கென அவனை ஆயத்தப்படுத்தினார். (3:10)
ஆகவே தைரியமாக இருங்கள். நாம் ஒருக்காலும் தேவனுடைய கண்களுக்கு மறைவாக இருப்பதில்லை.