“அவன் தன்னைத்தானே மிகவும் பெரியவனாக எண்ணுகிறான்.” அது, நாங்கள் அறிந்துள்ள ஓர் உடன் கிறிஸ்தவனைப் பற்றிய எனது சிநேகிதனின் கருத்தாகும். அவன் பெருமையின் கூடிய ஆவியை உடையவனாக அவனைக் காண்கிறோம் என்று நாங்கள் எண்ணினோம். வெகு சீக்கிரத்தில் அவன் தவறான சில செயல்களுக்காக பிடிபட்டான் என்பதை அறிந்த பொழுது மிகவும் மன வருத்தம் அடைந்தோம். அவன் தன்னைத்தானே உயர்த்தினபடியினால் உபத்திரவத்தைத்தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. அதே நிலைமை நம் அனைவருக்குமே ஏற்படலாம் என்பதை உணர்ந்து கொண்டோம்.
நமது இருதயங்களிலுள்ள பெருமை என்ற பயங்கரமான பாவத்தை குறைவாக மதிப்பிடுவது எளிதானது. நாம் அதிகமாகப்படித்து, அதிகமான வெற்றிகளை அடைந்து மகிழ்ச்சியில் திளைக்கும் பொழுது நாம் “உண்மையிலேயே மிகவும் உயர்வானவர்கள்” என்று நம்மைக் குறித்து நாமே எண்ணிக்கொள்வோம். பெருமை என்பது நமது இயற்கையான சுபாவத்தின் மையமாக உள்ளது.
வேதாகமத்தில் “எஸ்றா, மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்” (எஸ்றா 7:6) என்றுவிவரிக்கப்படுகிறான். சிறை இருப்பிலிருந்த எபிரேய மக்களை எருசலேமுக்கு கூட்டிக் கொண்டு செல்வதற்கான பயணத்திற்காக எஸ்றா அர்தசஷ்டா இராஜாவினால் நியமிக்கப்பட்டான். பெருமை என்ற பாவத்திற்குட்பட எஸ்றாவிற்கு பலகாரணங்கள் இருந்தன.
ஆனால் அவன் அந்தப் பாவத்தில் விழவில்லை. எஸ்றா தேவனுடைய நியாயப் பிரமாணங்களை அறிந்ததோடு மட்டுமல்லாமல் அவற்றை வாழ்ந்தும் காண்பித்தான்.
எஸ்றா எருசலேமை அடைந்தவுடன் யூத ஆண் மக்கள் பலர், அந்நிய தெய்வங்களை வழிபட்டு வந்த பெண்களைத் திருமணம் செய்ததினால், தேவனால் விதிக்கப்பட்ட கட்டளைகளை மீறினார்கள் என்பதை அறிந்தான். (9:1-2) அவன், அவனது வஸ்திரத்தையும், சால்வையும் கிழித்து உள்ளான மனதுக்கத்துடன் தேவனை நோக்கி பிரார்த்தித்தான். (வச. 5-15) தேவன் மீதும் அவனது மக்கள் மீதும் இருந்த உண்மையான அன்பு எஸ்றாவின் உயர்ந்த பதவியையும், அறிவையும் வழி நடத்தினது. “இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள்; இதினிமித்தம் நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல” என்று பிரார்த்தித்தான். (வச.15)
அவர்களது பாவத்தின் விளைவை எஸ்றா அறிந்திருந்தான். ஆனால் மனத்தாழ்மையுடன் அவன் மனந்திரும்பி மன்னிக்கும் தன்மையுடைய தேவனின் நற்குணத்தை நம்பினான்.
உள்ளத்தில் பெருமை
வாசிப்பு: எஸ்றா 9:1-9 | ஓராண்டில் வேதாகமம்: ஏசாயா 62-64 & 1 தீமோத்தேயு 1
எஸ்றா இஸ்ரவேலின்
தேவனாகிய கர்த்தர்...
தேறின வேதபாரகனாயிருந்தான்.
(7:6)
எல்லா விதத் தீமைகளுக்கும் பெருமை தான் வழிகாட்டியாக உள்ளது.
பெருமை தேவனுக்கு எதிராக செயல்படக்கூடிய மன நிலையாகும்.
Our Daily Bread Topics:
odb