ஓய்வு பெற்ற இயற்பியல் வல்லுநராகிய ஏரி வான்ட் ரயட் வித்தியாசமான முறையில் கலைப் பொருட்களை செய்து வருகிறார். அவர் தாவரங்களையும், இறந்த போன விலங்குகளையும் வரிசையாக அடுக்கி அவற்றின் எக்ஸ்ரே எடுக்கிறார். பின்பு மேம்படுத்தப்பட்ட x-ரேக்களை கணிணியின் நினைவகத்தில் இடுவதற்காக அவற்றை மின் செய்தியாக மாற்றுகிறார். பின்பு அவரது படங்களின் சில பகுதிகளுக்கு வண்ணமேற்றுகிறார். அவரது கலைத்திறன், பூக்கள், மீன் பறவைகள், ஊர்வன, குரங்குகள் போன்றவற்றின் சிக்கலான உள் அமைப்பை தெளிவாக விளக்குகின்றன.
பொருட்களை வெளியே பார்க்கும் காட்சியை விட உள் அமைப்பைப் பார்க்கும் பொழுது, அது குறிப்பிடத்தக்கதாகவும், ஆர்வத்தை ஈர்க்கக் கூடியதாகவும் உள்ளது. எலியாப்பை சாமுவேல் பார்த்தவுடனேயே, இஸ்ரவேலின் அடுத்த இராஜவாக அவன் தகுதி உடையவனாக இருக்கலாம் என்று எண்ணினான். (1 சாமுவேல் 16:6) எலியாப்பின் வெளித்தோற்றத்தைப் பார்க்கக் கூடாது என்று சாமுவேலை எச்சரித்தார். “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” (வச.7) என்று தேவன் சாமுவேலிடம் கூறினார். எலியாப்பிற்கு பதிலாக தாவீதை அடுத்த இஸ்ரவேல் இராஜவாக தேவன் தேர்ந்தெடுத்தார்.
தேவன் நம்மை பார்க்கும் பொழுது நமது உயரத்தை விட நமது இருதயத்தையும் நமது முகத்தின் தோற்றத்தை விட உள்ளத்தின் அழகையும் பார்க்கிறார். நம்மைப் அதிக வயதானவராகவோ, அதிக இளமையானவராகவோ மிகவும் சிறியவரென்றோ அல்லது மிகவும் பெரியவரென்றோ தேவன் பார்ப்பதில்லை. மிகவும் முக்கியமாக அவருடைய அன்பிற்கு நாம் எப்படி மாறுத்தரம் சொல்லுகிறோம் என்பதையுமே தேவன் பார்க்கிறார். (மத்தேயு 22:37-39) இரண்டு நாளாகமம் 6:30 தேவன் ஒருவரே மனினுடைய இருதயங்களின் ஆழங்களைக் காண இயலும் என்று கூறுகிறது. நமக்காக மிகப் பெரிய காரியங்களைச் செய்த தேவன் நமது உள்ளங்களைப் பார்க்கும் பொழுது எதைக்காண்கிறார்?