எங்களது மகள் 15 வயதாக இருந்தபொழுது வீட்டை விட்டு ஓடிவிட்டாள். 3 வாரங்களுக்கு மேலாக அவள் வரவே இல்லை. எல்லா இடங்களிலும் அவளைத் தேடிப்பார்த்தோம். பின்பு, காவல்துறையினரின் உதவியை சிநேகிதர்கள் ஆகியவர்களின் உதவியை நாடினோம். நம்பிக்கை இழந்து நின்ற அந்த நாட்களில், நானும் எனது மனைவியும் ஜெபத்தில் தேவனுக்கு காத்திருப்பதின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கற்றுக் கொண்டோம். எங்களது பெலனும் முயற்சிகளும் பயனற்று ஓர் நிலைக்கு வந்து விட்டோம். நாங்கள் தேவனையே நம்பி இருக்க வேண்டியிருந்தது.
ஒரு தந்தையர் நாளன்று அவளைக் கண்டு பிடித்தோம். இரவு உணவை உண்பதற்காக, ஓர் உணவகத்தின் வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்தபொழுது தொலைபேசி ஒலித்தது. மற்றொரு உணவகத்தில் இருந்த ஒரு பெண் பணியாளர் அவளைப் பார்த்துள்ளாள். எங்களது மகள் மூன்றே மூன்று கட்டிடங்கள் தள்ளித்தான் இருந்தாள். உடனே அவளை பத்திரமாக, பாதுகாவலாக வீட்டிற்கு அழைத்து வந்தோம்.
நாம் ஜெபிக்கும் பொழுது நாம் கர்த்தருக்குக் காத்திருக்க வேண்டியது அவசியம். அவர் எப்படி, எப்பொழுது பதிலளிப்பார் என்று தெரியாது. ஆனால் நாம் தொடர்ந்து நமது இருதயங்களை அவரிடம் ஊற்றவேண்டும். சில சமயங்களில் நாம் எதிர்பார்க்கும் வேளைகளில் பதில் வராது. காரியங்கள் இருக்கும் நிலையை விட மிக மோசமான நிலையைக் கூட அடையலாம். ஆனால் நாம் தொடர்ந்து நம்பிக்கையோடு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
காத்திருத்தல் இலேசான காரியமல்ல. ஆனால் முடிவு என்னவாக இருந்தாலும் சிறந்ததாகவே இருக்கும். “கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.” (சங்கீதம் 9:10) என்று தாவீது இப்படியாக எழுதியுள்ளார். தேடிக் கொண்டே இருங்கள், நம்பிக்கொண்டே இருங்கள், கேட்டுக் கொண்டே இருங்கள், ஜெபித்துக் கொண்டே இருங்கள்.