புதிதாகக் கட்டப்பட்ட எங்களது வீட்டில் கொடுக்கப்பட்ட மோசமான மின் இணைப்பினால், எங்களது புதிய வீடு தீப்பிடித்து எரிந்து போனது. ஒரு மணி நேரத்திற்குள்ளாக நெருப்பின் சுவாலை எங்கள் வீடு முழுவதையும் எரித்து சாம்பலாக்கி விட்டது மிஞ்சினது கட்டிடத்தின் இடிபாடுகள் தான். முன்னொரு முறை ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆராதனை முடிந்து வீடு திரும்பின பொழுது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டிலுள்ள சில பொருட்கள் திருடப்பட்டிருந்தன.
குறைபாடுள்ள இவ்வுலகில் உலகப்பிரகாரமான ஆஸ்திகளை இழப்பது மிகவும் சாதாரணகாரியம். உதாரணமாக வாகனங்கள் திருடப்படுகின்றன, அல்லது மோதி விபத்திற்குள்ளாகின்றன, கப்பல்கள் மூழ்குகின்றன, கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன, வீடுகள் வெள்ளத்தால் சூழப்படுகின்றன. தனி நபரின் பொருட்கள் திருடப்படுகின்றன பூமியிலே உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்துவைக்க வேண்டாம், என்ற இயேசுவின் எச்சரிக்கையை இது மிகவும் அர்த்தமுள்ளதாக்குகிறது. (மத்தேயு 6:19)
தனக்காகவே அதிகமாக சொத்துக்களை சேர்த்துவைத்த ஒரு மனிதனைப் பற்றிய கதையை இயேசு கூறினார். (லூக்கா 12:16-21) “நீ இளைப்பாறி புசித்துக் குடித்து பூரிப்பாயிரு”. (வச.19) என்று அந்த மனிதன் தனக்குத்தானே கூறிக்கொண்டான். அன்று இராத்திரியிலே அவனுடைய ஆத்துமா அவனிடத்திலிருந்து எடுத்து கொள்ளப்பட்டால் அவன் சேகரித்த பொருட்களினால் அவனுக்கு பயனேதுமில்லை, முடிவாக இயேசு “தேவனிடத்தில் ஐசுவரியனாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கிறவன் இப்படியே இருக்கிறான்” என்று கூறினார். (வச.21)
உலகப்பிரகாரமான செல்வம் நிலையற்றது. பிறருக்காக நாம் செய்யக் கூடிய நன்மைகளைச் செய்ய தேவன் நமக்கு அருளும் கிருபையே என்றென்றும் நிலைத்திருக்குமே தவிர மற்ற எதுவுமே நிலைத்திருக்காது. தேவனைப் பற்றிய நற்செய்தியை பரப்புவதற்காக நமது பொருட்களையும், நமது நேரத்தையும் செலவழிப்பது, தனிமையாக இருப்பவர்களைப் போய் சந்திப்பது, தேவையில் உள்ளவர்களின் தேவைகளை சந்திப்பது போன்ற காரியங்கள் பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்த்துவைப்பதற்கான ஒரு சில வழிகளாகும். (மத்தேயு 6:20)
பரலோகத்தில் பொக்கிஷம்
வாசிப்பு: மத்தேயு 6: 19-24 | ஓராண்டில் வேதாகமம்: ஏசாயா 47-49 & 1 தெசலோனிக்கேயர் 4
பரலோகத்திலே உங்களுக்குப்
பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்;
அங்கே பூச்சியாவது துருவாவது
கெடுக்கிறதும் இல்லை; அங்கே
திருடர் கன்னமிட்டுத்திருடுகிறதும்
இல்லை. (வச.20)
நமது உண்மையான பொக்கிஷம், நித்தியத்திற்கென
நாம் சேர்த்துவைக்கும் பொக்கிஷங்களே ஆகும்.
Our Daily Bread Topics:
odb