நான் என் வாகனத்தை ஏறக்குறைய அரைமணி நேரம் ஓட்டிச் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென, பின் இருக்கையிலிருந்த எனது மகள் வீரிட்டுக் கத்தினாள். “என்ன நடந்தது” என்று நான் கேட்ட பொழுது அவளுடைய சகோதரன் அவளது கையைப் பிடித்து இழுத்தான் என்றாள். அவள் அவனைக் கிள்ளினதினால் அவள் கையை இறுகப்பிடித்து இழுத்ததாக அவன் கூறினான். அவன் அன்பற்ற கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேசினதினால் அவன் கையைக் கிள்ளினேன் என்றாள்.
துரதிஷ்டவசமாக, சிறு பிள்ளைகள் மத்தியில் காணப்படும் இப்படிப்பட்ட தன்மை பெரியவர்களின் உறவுகள் மத்தியிலும் ஏற்படுகிறது. ஒருவர் மற்றொருவரை மன நோகச் செய்கிறார். பாதிக்கப்பட்டவர் வார்த்தைகளினால் அவரைச் சாடிவிடுகிறார். முதலில் மனம் நோகவைத்தவர் திரும்பவும் அவரை மரியாதைக் குறைவுடன் தாக்குகிறார். சிறிது நேரத்திற்குள்ளாக கோபமும், கடுமையான வார்த்தைகளும் உறவை சீர்குலைத்து விடுகின்றன. “பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு, மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்;; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” (நீதி 12:18; 15:1) என்று வேதாகமம் கூறுகிறது. சில சமயங்களில் அன்பற்ற வார்த்தைகளையோ அல்லது விமர்சனங்களைப் பற்றியோ எதுவும் திரும்பப் பேசாமல் அமைதியாக இருப்பதே சிறந்த வழியாகும்.
இயேசு சிலுவையில் அறையப்படுமுன் யூத மதத்தலைவர்கள் அவர்களது வார்த்தைகளினால் அவரைப் பரியாசம் பண்ணினார்கள். (மத்தேயு 27:41-43) ஆனால், “அவர் வையப்படும் போது… ஒப்புவித்தார்” என்று 1 பேதுரு 2:23 கூறுகிறது.
இயேசுவின உதாரணமும், பரிசுத்தாவியின் உதவியும், நம்மை பரிகசிக்கும் மக்களுக்கு எப்படி மாறுத்தரம் சொல்ல வேண்டுமென்று நமக்கு வழிகாட்டுகின்றன. கர்த்தரை நாம் நம்பும் பொழுது வார்த்தைகளை ஆயுதங்களாகப் பயன்படுத்தத் தேவை இல்லை.
கவனக் குறைவான வார்த்தைகள்
வாசிப்பு: 1 பேதுரு 2:13-25 | ஓராண்டில் வேதாகமம்: ஏசாயா 30-31 & பிலிப்பியர் 4
அவர் வையப்படும்போது
பதில் வையாமலும் (வச.23)
அநேக நேரங்களில் மெதுவான பிரதியுத்தரம் கல்லான
இருதயத்தை உடைக்கும் கருவியாக உள்ளது.
Our Daily Bread Topics:
odb