எனது சிநேகிதி மெக்கான் குதிரைப்பயிற்சியில் திறமை மிக்கவள். அவளிடமிருந்து குதிரைகளைப்பற்றிய சில உண்மைகளை அறிந்து கொண்டிருக்கிறேன். உதாரணமாக பாலூட்டிகளிலேயே மிகப்பெரிய கண்களை உடையதாக குதிரைகள் இருந்தாலும், குதிரைகளுக்கு குறைவான பார்வையே உள்ளது என்றும், மனிதர்களைவிட மிகக்குறைவான நிறங்களையே காண இயலும் என்பதையும் அறிந்து கொண்டேன். இதனால் தரையிலே கிடக்கும் பொருட்களை என்னவென்று அவைகளால் தெரிந்து கொள்ள இயலாது தரையிலே ஒரு கட்டையைக் கண்டால் அது அவைகளால் தாண்டிச் செல்லக் கூடிய ஒரு பொருளா அல்லது அவைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு பாம்பா என்று அவைகளால் வேறுபடுத்த இயலாது. இந்தக் காரணத்தினால்தான் சரியானபடி பயிற்சி பெறும் வரை அவைகள் எளிதாக பயத்திற்குட்பட்டு வேகமாக ஓடிப் போகக் கூடியவைகளாக உள்ளன.
நாமும் கூட ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து ஓட விரும்புகிறோம். யோபு அவனது கஷ்டங்களைத் தவறுதலாகப் புரிந்துகொண்டு அவன் பிறந்தே இருக்கக் கூடாது என்று எண்ணினான். அவனைப் போலவே நாமும் உணரலாம். அவனது நம்பிக்கையை குலைக்கும் வண்ணம், சாத்தான்தான் செயல்படுகிறான் என்று அவனால் பார்க்க இயலாததால் அவன் நம்பி இருந்த தேவனே தன்னை அழிக்க முயலுகிறார் என்று யோபு பயந்தான். அவன் துக்கத்தினால் நிறைந்து “தேவன் என்னைக் கவிழ்த்து தம்முடைய வலையை என்மேல் வீசினார்” (யோபு 19:6) என்று கதறினான்.
யோபுவின் பார்வையைப் போலவே நமது பார்வையும் ஓர் எல்லைக்குட்பட்டதாய் இருக்கிறது நம்மை பயமுறுத்தும் சூழ்நிலைகளிலிருந்து தப்பி ஓட விரும்புகிறோம். தேவனுடைய கண்ணோட்டத்தில் நாம் தனிமையாக இல்லை. நம் மனதை குழப்பமடையவைத்து நம்மை பயத்திற்கு உட் படுத்தும் காரியங்கள் எவை என்று தேவன் அறிந்திருக்கிறார். அவர் நமது அருகில் இருப்பதால் நாம் பாதுகாவலாக உள்ளோம் என்பதையும் அறிந்திருக்கிறார். நாம் நமது புரிந்து கொள்ளுதலின் மேல் சாராமல், அவரது புரிந்து கொள்ளுதலின் மேல் நாம் நம்பிக்கையாக இருக்க இதுவே நமது தருணமாகும்.
தெளிவற்ற பார்வை
வாசிப்பு: யோபு 19: 1-21 | ஓராண்டில் வேதாகமம்: ஏசாயா 28-29 & பிலிப்பியர் 3
என் காதினால் உம்மைக்
குறித்துக்; கேள்விப்பட்டேன்;
இப்பொழுதோ என் கண்
உம்மைக் காண்கிறது. (42:5)
தேவனின் உண்மைத் தன்மையை நம்புவது, நமது
பயங்களை மறக்கச் செய்கிறது.
Our Daily Bread Topics:
odb