24 மணிநேரத்தை ஒரு நாளுக்குள் அடக்கினால் “70 ஆண்டு வாழும் சாதாரண வாழ்க்கை இப்பொழது எனது வாழ்க்கையில் மாலை 8:30 மணி நேரமாக இருக்கும். காலம் வெகு வேகமாக கடந்துபோகிறது” என்று எனது 59 வயது சிநேகிதன் பாப் போர்ட்மேன் எழுதினான். இவ்வுலகில் நாம் வாழும் காலம் மிகவும் குறுகியது என்ற உண்மை “டிக்கர்” என்ற கைக்கடிகாரத்தை உருவாக்கும் எண்ணத்தைக் கொடுத்தது. நேரத்தை காண்பிக்கும் அந்தக்கடிகாரம் இந்த உலகில் நீங்கள் வாழ இருக்கும் காலத்தை கணக்கிட்டு உங்களது வாழ்க்கையில் எஞ்சியுள்ள காலத்தைக் கணக்கிட்டுக் கூறும். அக்கடிகாரத்திற்கான விளம்பரத்தில் “உங்கள் வாழ்நாளில் ஒரு வினாடி கூட வீணாக்காமல் இருப்பதற்காக, உங்களது வாழ்நாளைக் கணக்கிட்டுக் கூறும் கடிகாரம்” என்று இருந்தது.
சங்கீதம் 39ல் வாழ்க்கையின் குறுகிய தன்மையைக் குறித்து “கர்த்தாவே, நான் எவ்வளவாய்… எனக்குத் தெரிவியும்” (வச.4) என்று தாவீது புலம்புகிறான். அவனது ஆயுசு நாட்கள் நான்கு விரற்கடையளவுதான் என்றும், கர்த்தருடைய பார்வையில் அது இல்லாதது போல உள்ளது என்றும் விவரிக்கிறான். இறுதியில் தாவீது “இப்போதும் ஆண்டவரே நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்?” நீரே என் நம்பிக்கை” (வச.7) என்று முடிக்கிறான்.
கடிகாரம் ஓடிக்கொண்டேயிருக்கிறது தேவன் விரும்பத்தக்க மக்களாக நாம் மாறுவதற்கு அவருடைய வல்லமையைப் பெற்றுக் கொள்ள இதுவே தருணம். நமது நித்தியமான தேவனிடமிருந்து நமது நம்பிக்கையை பெற்றுக் கொள்வது, நம்முடைய இன்றைய வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிறது.
ஒவ்வொரு வினாடியும் முக்கியம்
வாசிப்பு: சங்கீதம் 39:4-13 | ஓராண்டில் வேதாகமம்: ஏசாயா 23-25 & பிலிப்பியர் 1
என் வாழ்க்கையின் முடிவை
எனக்குத் தெரிவியும்
(வச. 4)
இயேசுவுக்காக வாழ வேண்டிய தருணம் இதுவே.
Our Daily Bread Topics:
odb